»   »  இணையத்தில் வைரலாகிறது "பிரபாஸின்" கார் விளம்பரம்

இணையத்தில் வைரலாகிறது "பிரபாஸின்" கார் விளம்பரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்த கார் விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 133,060 பேர் இந்த கார் விளம்பரத்தை யூடியூபில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் கவனம் பெற்ற தெலுங்கு நடிகர் பிரபாஸ் சமீபத்தில் மகேந்திரா TUV300 என்ற கார் விளம்பரத்தில் நடித்தார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கடுமையாக இருந்தாலும் நான் செய்வேன் என்ற ரீதியில் அதிரடி ஆக்க்ஷன் காட்டி இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ்.

பிரபாஸ்

பிரபாஸ்

டோலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த பிரபாஸ் தற்போது பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் புகழ் பெற்று விட்டார். ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது மட்டுமின்றி, இந்தியளவில் சக்தி வாய்ந்த மற்றும் விரும்பத்தகுந்த ஒரு நடிகராகவும் பிரபாஸ் மாறியிருக்கிறார்.

இந்தியா

இந்தியா

உலகின் மிகப்பெரிய சந்தையாக நமது இந்திய நாடு திகழ்கிறது. எனவே இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளும் தங்கள் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர். பொருட்களை விற்பனை செய்வோர், மக்களின் மனதைக் கவரும் வகையில் அவ்வப்போது பொருட்களுக்கான விளம்பரங்களையும் உருவாக்கி வெளியிடுகின்றனர்.

விளம்பர உலகில்

விளம்பர உலகில்

இந்தியளவில் பல்வேறு பிரபலங்களும் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய், சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான், ரன்பீர் கபூர், காத்ரீனா கைப் போன்ற பிரபலங்கள் இந்தியளவிலான விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

தென்னிந்தியா

தென்னிந்தியா

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கோலிவுட் மற்றும் டோலிவுட் உலகினர் அதிக விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக சூர்யா மற்றும் மகேஷ்பாபு ஆகியோர் விளம்பர உலகின் இளவரசர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்.

பாகுபலிக்குப் பின்பு

பாகுபலிக்குப் பின்பு

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இந்தியளவில் மட்டுமின்றி உலகளவிலும் அங்கீகாரம் பெற்ற நாயகனாக பிரபாஸ் மாறிவிட்டார். இதனால் தங்கள் விளம்பரங்களில் பிரபாஸ் நடிக்க வேண்டும் என்று பல்வேறு நிறுவனங்களும் விரும்புகின்றன.மேலும் பலரும் அவர் கேட்கும் சம்பளத்தை கொட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர்.

முந்திக் கொண்ட மகேந்திரா

முந்திக் கொண்ட மகேந்திரா

இந்த விஷயத்தில் மகேந்திரா கார் நிறுவனம் முந்திக் கொண்டது. தாங்கள் புதிதாக அறிமுகபடுத்தும் மகேந்திரா TUV300 கார் விளம்பரத்தில் பிரபாசை பிராண்ட் அம்பாசடராக நியமித்து இருக்கின்றனர். சமீபத்தில் பிரபாஸின் நடிப்பில் உருவான கார் விளம்பரத்தையும் அவர்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.

கடுமையாக இருந்தாலும்

கடுமையாக இருந்தாலும்

கடுமையாக இருந்தாலும் நான் செய்வேன் என்ற ரீதியில் அதிரடி ஆக்க்ஷன் காட்டி இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ். ராஜஸ்தான் கோட்டை ஒன்றின் முன்னால் ஒரு சிறுவனைக் கடத்துகின்றனர். திடீரென கோட்டையின் கதவை உடைத்துக் கொண்டு ஒரு கார் வெளியே வருகிறது. காரை ஓட்டிக் கொண்டு வரும் பிரபாஸ் அந்த சிறுவனை பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் காப்பாற்றுகிறார். கடைசியில் ஒரு விளம்பரப் படத்தின் ஷூட்டிங் என்று முடிக்கும் போது இயக்குநர் சூப்பர் என்று கூற, பிரபாஸ் ஒன் மோர் கேட்பது போல விளம்பரம் முடிகிறது.

விளம்பரத்தை விளம்பரமாகவே

விளம்பரத்தை உண்மையாக எடுக்காமல் விளம்பரமாகவே எடுத்திருப்பதால் மீண்டும், மீண்டும் ரசிக்கின்ற வகையில் இந்த கார் விளம்பரம் இருக்கின்றது. யூடியூபில் வெளியான 21 மணி நேரத்திற்குள் சுமார் 133,060 பேர் இதனைப் பார்த்து ரசித்திருக்கின்றனர். சுமார் 2000 க்கும் அதிகமான பேர் இந்த விளம்பரத்தை லைக் செய்திருக்கின்றனர்.

மகேந்திரா

மகேந்திரா

மகேந்திரா TUV 300 புதிதாக அறிமுகமாகியிருக்கும் இந்தக் காரின் விலை சுமார் 6.98 லட்சங்களில் தொடங்கி 9.2 லட்சங்களில் முடிவடைகின்றது. டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் தற்போது விற்பனைக்கு மகேந்திரா TUV 300.

பிரபாஸ் விளம்பரத்தில் கூட மரண மாஸ் காட்டுறாரே...

Read more about: prabhas பிரபாஸ்
English summary
The first commercial of the vehicle featuring Prabhas has been released and it has gone viral within hours.The advertisement has been viewed by more than one lakh users within a day of its release.The one-minute-long advertisement has some breathtaking stunt scenes by the actor highlighting the rough and tough features of TUV300.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil