லண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி!

லண்டன்: லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் வரலாற்றில் முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத ஒரு படமாக பாகுபலி படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்தியராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் மிக பிரமாண்டமாய் உருவான படம் பாகுபலி. இதன் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியானது.

வசூலையும் அள்ளிக்குவித்து சாதனை படைத்தது. இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான் உட்பட வெளிநாடுகளிலும் சாதனை படைத்தது இப்படம்.

வரலாற்று சாதனை

இந்நிலையில் இந்தப்படம் மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்தது. அதாவது லண்டனில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்ட இந்தியப் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

லண்டனில் பாகுபலி

லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஆல்பர்ட் தியேட்டரில் பாகுபலி படம் திரையிடப்பட்டது. இங்கிலிஷ் டைட்டிலுடன் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டடது.

முதல் முறையாக..

லண்டன் ஆல்பர்ட் தியேட்டர் தொடங்கப்பட்ட 148 ஆண்டுகளில் இதுவரை ஆங்கிலம் தவிர எந்த வேற்று மொழிப்படமும் ஒளிபரப்பப்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக இந்திய மொழி திரைப்படமாக பாகுபலி தி பிகினிங் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

லண்டனில் படக்குழு

லண்டனில் படக்குழு

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பாகுபலி படக்குழுவினரும் பங்கேற்றனர். படத்தின் இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி, தயாரிப்பாளர் ஷோபு, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ஆகியோர் வரலாற்று நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

லண்டன் வீதிகளில் ஜாலியாக சுற்றிய பாகுபலி படக்குழுவினர் ரசிகர்களுடன் பாகுபலி படத்தை கண்டு ரசித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X