டீச்சரா அது யாரு.. அப்பாவியாக கேட்ட கோபி.. கோபத்தில் எகிறிய ராதிகா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருடன் மகா சங்கமத்தில் இணைந்துள்ளது.

இரண்டு குடும்பங்களும் தற்போது கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இதனால் கோபியின் பாடு திண்டாட்டமாக மாறியுள்ளது.

கோபி -ராதிகாவின் திருமணம் குறித்து அறியாத பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் திட்டித் தீர்த்துள்ளனர்.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்


விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவிடமிருந்து விவாகரத்து பெற்ற கையோடு, இதுதான் சிறப்பான தருணம் என்று கோபி, ராதிகாவை உடனடியாக திருமணம் செய்துக் கொண்டார். அந்த திருமணமே கலாட்டா கல்யாணமாக நடந்து முடிந்துள்ளது.

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம்

திருமணம் குறித்து அறியவந்த பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி, இனியா, எழில், செழியன் என அனைவரும் திருமண மண்டபத்திற்கு போய் திருமணத்தை நிறுத்த தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்களை அனைவரையும் சிறப்பாக சமாளித்து ராதிகாவை கோபி திருமணம் செய்துக் கொள்கிறார்.

கோபியை அவமானப்படுத்திய ஈஸ்வரி

கோபியை அவமானப்படுத்திய ஈஸ்வரி

இதையடுத்து தொடர்ந்து கோபிக்கு சப்போர்ட் செய்துவந்த அவரது அம்மா ஈஸ்வரி, இனி தன்னுடைய மருமகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் தாங்கள் ஆதரவாக இருப்போம் என்று சபதம் செய்துவிட்டு, இனி தன்னை அம்மா என்று கோபி அழைக்கக்கூடாது என்றும் கூறிவிட்டு வருகிறார்.

கோபி -ராதிகா ஹனிமூன் ட்ரிப்

கோபி -ராதிகா ஹனிமூன் ட்ரிப்

இதனால் அதிகமான வருத்தத்தில் கோபி மூழ்கினாலும் ராதிகாவை திருமணம் செய்த மகிழ்ச்சியில் கொடைக்கானலுக்கு விருது ஒன்றை வாங்குவதற்காகவும் ஹனிமூனையும் திட்டமிட்டும் செல்கிறார். அங்கும் அவருக்கு ஏழரை காத்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தினரும் அங்கு வருகின்றனர்.

மகா சங்கமம்

மகா சங்கமம்

இதையொட்டி மகா சங்கமமாக இந்தத் தொடர் தினந்தோறும் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் திருமணத்தையொட்டிய பரபரப்பான எபிசோட்களை அடுத்து தற்போது இந்த மகா சங்கமமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கோபி -ராதிகாவின் திருமணம் குறித்து அறியாத பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சேர்ந்த மூர்த்தி, கண்ணன் இருவரும் ராதிகாவையும் கோபியையும் அசிங்கமாக திட்டிவிட்டு வருகின்றனர்.

கோபியை திட்டும் ராதிகா

கோபியை திட்டும் ராதிகா

இதையடுத்து ராதிகா மிகுந்த கோபத்துடன் கோபியை திட்டுகிறார். சென்னையில் நடைபெற்ற சம்பவங்கள் எதுவும் இங்கு நடக்காது என்று கூறிதானே தன்னை கொடைக்கானலுக்கு அழைத்து வந்தீர்கள் என்று கோபியிடம் சரமாரியாக கேள்விகளை கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார் கோபி.

டீச்சர் என அழைக்காதே

டீச்சர் என அழைக்காதே

தொடர்ந்து டீச்சருக்கு தான் துரோகம் செய்ததாக மூர்த்தி கூறியதை சுட்டிக்காட்டி சண்டை பிடிக்கிறார் ராதிகா. இதையடுத்து டீச்சரா அது யாரு என்று கேட்டு, ராதிகாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார் கோபி. தொடர்ந்து படிக்காத பாக்கியாவை டீச்சர் என்று இனி அழைக்க வேண்டாம் என்றும் கோபி கூறுகிறார்.

குடையும் ராதிகா

குடையும் ராதிகா

தொடர்ந்து கேள்விகளாக கேட்டு குடைகிறார் ராதிகா. ஹனிமூன் வந்த இடத்தில் தொடர்ந்து தான் சந்திக்கும் இடையூறுகளால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ள கோபி, ராதிகாவை சமாதானப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறார். இவ்வாறு இந்த தொடரின் புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X