மீண்டும் வீட்டிற்கு வந்த பாக்கியா.. ஆனா முகத்துல ஒரு தீவிரம் தெரியுதே..

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் ரசிகர்கள் சந்தித்து வருகிறது.

இந்தத் தொடரில் தனது கணவன் கோபியின் காதல் குறித்து தெரிந்துக் கொள்ளும் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் செய்வது அறியாது திணறுகின்றனர். பாக்கியாவை வீட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் அவர்களது முயற்சி தோல்வியையே சந்திக்கிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியின் முதலிடத்தில் உள்ள தொடராக மாறியுள்ளது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர் போன்ற முக்கியமான ரசிகர்களை கவர்ந்த தொடர்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மாட்டிக் கொள்ளும் கோபி

மாட்டிக் கொள்ளும் கோபி

கணவன் -மனைவி மற்றும் கணவனின் காதலி இந்த கேரக்டர்களை சுற்றியே இந்த தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது. தன்னுடைய காதல் தன்னுடைய குடும்பத்திற்கு தெரியாமல் பலபல தகிடு தத்தங்களை செய்யும் கோபி ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலி மற்றும் மனைவியிடம் மாட்டிக் கொள்கிறார்.

 கொதித்தெழும் பாக்கியா

கொதித்தெழும் பாக்கியா

இந்தக் காதல் தெரியவரும் நிலையில் கொதித்தெழுகிறார் அவரது மனைவியான பாக்கியா. தன்னுடைய இத்தனை ஆண்டுகால தாம்பத்யம் கேள்விக்குறியான நிலையில் பரிதவிக்கும் அவர், தன்னுடைய கணவன் கோபியை நிற்க வைத்து கேள்விக் கேட்கிறார். இதனால் கோபியும் நிலைக்குலைகிறார்.

வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா

வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா

தொடர்ந்து ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கிறார் பாக்கியா. அவரை வீட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிறது. இதையடுத்து எந்த மாதிரியான முடிவை பாக்கியா மேற்கொள்வார் என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

 வாழ்க்கையை வாழ சொல்லும் மகன்

வாழ்க்கையை வாழ சொல்லும் மகன்

இந்நிலையில் தன்னுடைய மகன் எழிலுடன் கடற்கரைக்கு செல்லும் பாக்கியா, தன்னுடைய வாழ்க்கையை இந்த வயதில் தீர்மானித்தால் தவறா என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு எழில், இனிமேலாவது அவருடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும் என்றும் கூறுகிறார்.

வீட்டிற்கு திரும்ப வரும் பாக்கியா

வீட்டிற்கு திரும்ப வரும் பாக்கியா

இதையடுத்து மறுநாள் காலையில் எழும் பாக்கியா, தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய மகனிடம் கூறுகிறார். அவரும் அழைத்து செல்கிறார். அவர் மீண்டும் வீட்டிற்கே வரமாட்டார் என்று நினைக்கும் அவரது குடும்பத்தினர், அவரை உற்சாகமாக வரவேற்கின்றனர். மகள் இனியா மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்.

கணவனை சந்திக்கும் பாக்கியா

கணவனை சந்திக்கும் பாக்கியா


இந்நிலையில், தான் போய் குளித்துவிட்டு வருவதாக சொல்லும் பாக்கியா, மேலே மாடியில் உள்ள தன்னுடைய அறைக்கு செல்கிறார். அங்கு அவரை எதிர்கொள்ளும் கோபி, திருட்டு முழி முழிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது. வீட்டிற்கு வரும் பாக்கியா, தொடர்ந்து அங்கேயே தங்கும் முடிவுடன் வரவில்லை என்பது மட்டும் அவருடைய தீர்க்கமான நடவடிக்கை மூலம் தெரியவருகிறது.

 கேள்விக்குறியான வாழ்க்கை

கேள்விக்குறியான வாழ்க்கை


தொடர்ந்து அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் இந்தத் தொடர் ரசிகர்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பாக்கியாவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தன்னுடைய 25 ஆண்டுகால வாழ்க்கையில் தான் பெற்றது என்ன என்பதை அவர் ஏமாற்றத்துடன் கேட்ட நிலையில், அவரது முடிவு கதையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X