தம்பியை இழந்தேன்..பெற்றோரை இழந்தேன்..பதறவைக்கும் கோபியின் உண்மை கதை !
சென்னை : பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவத்தை வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.
இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலில் வரும் கோபி தான் இந்த சீரியலின் அத்தனை பரபரப்புக்கு காரணமாக உள்ளார். நெகடிவ் ரோலால் சீரியலின் டி.ஆர்.பியை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார் கோபி. பெயர் தான் பாக்கியலட்சுமி சீரியல் ஆனால் மொத்த கதையின் தூணாக கோபி இருக்கிறார்.

கோபியின் போலிமுகம்
இந்த சீரியலை பார்க்கும் பெரும்பாலான பெண்கள் கோபியை திட்டி தீர்க்கின்றனர். ஆனாலும் தான் ஏற்று நடிக்கும் ரோலில் சிறப்பாக நடித்து வருகிறார் சதீஷ் குமார். முதல் மனைவி பாக்கியாவுக்கு தெரியாமல் முன்னாள் காதலி ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார். வீட்டில் உள்ள அனைவருக்கும் கோபியின் போலிமுகம் தெரிந்துவிடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று சீரியல் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

விபத்தில் பெற்றோரை இழந்தேன்
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசிய சதீஷ், கோபியை மூஞ்சில ஒரு குத்து தூக்கி அவனை குப்பையில போடுங்க. இன்னைக்கு ஒரு முக்கியமான பெண்மணி பத்தி பேசப்போறேன். அவ பேரு தமிழ்., 5 வயதில் தம்பியை இழந்து விபத்தில் பெற்றோரையும் இழந்து ஒரு அனாதையாக சென்னைக்கு வந்தேன். இரண்டு சட்டை, இரண்டு ட்ரவுசர் மட்டும் தான் வைத்து இருந்தேன்.

இத்தனை சோகமா?
என் அத்தை வீட்டில் தான் வாழ்ந்தேன், வளர்ந்தேன், எனக்கு மொழி பேச சொல்லிக் கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, இப்போது வருமானம் கொடுத்து, எனக்கு பெயர் புகழ் கொடுத்து இன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான். என்னை பொறுத்தவரைக்கும் தமிழ் ஒரு மொழி மட்டும் இல்லை. அது கலாச்சாரம். அது ஒரு மதம். அது ஒரு சக்தி. வாழ்க தமிழ் என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோபியின் நிஜ வாழ்க்கையில் இத்தனை சோகமா என வருத்தத்துடன் வீடியோவை பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











