Baakiyalakshmi : விமானத்தில் அசிங்கமாக நடந்து கொண்ட நபர்… பளார்னு அறைந்த பாக்கியலட்சுமி ஜெனி!
சென்னை : இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா, தனக்கு நடந்த மோசனமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.
இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் கொண்டாடும் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக உள்ளது. இந்த சீரியலின் பாக்கியலட்சுமியாக வரும் சுசித்ரா ஷெட்டி கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அழகாக நடித்து வருகிறார். பாக்கியாவின் கணவராக வரும் கோபி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

கோபியை மதிக்காத ராதிகா
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ராதிகாவுடன் பழகி பாக்கியாவை ஏமாற்றி, பல தில்லாலங்கடி வேலைகளை செய்து அவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார் கோபி. ஆனால் ராதிகாவோ கோபியை கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்து கொண்டு கொள்கிறார். ஒரு பக்கம் பாக்கியா தனது வேலையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டு வருகிறார். இப்படி கதை விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது.

அந்த மோசமான சம்பவம்
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், விமானத்தில் தனக்கு நடந்த மோசமான விஷயம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். அதில், ஹைதராபாத்தில் இருந்து விமானத்தின் மூலம் வந்து கொண்டு இருந்தேன் அப்போது என் மேல் ஏதோ ஓடுவது போல இருந்தது. பயந்து போய் திடீரென எழுந்து பார்த்தேன் எதுவுமே இல்லை.

பளார்னு அறைந்தேன்
பின் மீண்டும் இருக்கையில் அமர்ந்த போது, அது பின் இருக்கையில் இருக்கும் நபரின் கை என்பதை உணர்ந்து அந்த கையை அப்படியே பிடித்து பளார் என்று அறைந்தேன். இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் அலறிவிட்டார். இதுபோன்று பல பெண்களுக்கு மோசமான சில சம்பங்கள் நடக்கலாம் , அவற்றை சகித்துக்கொண்டு கடந்து போகாமல், அந்த இடத்திலேயே இதுபோன்ற ஆட்களுக்கு சரியான நேரத்தில் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











