சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டியது பாரம்!
டெல்லி: 2019ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக பாரம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத் துறைக்கான தேசிய விருதுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் டெல்லி சாஸ்திரி பவனில் இயக்குநர் ராகுல் ரவாய்ல் தலையிலான குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

பல பிரிவுகளில்
இதில் மொழிவாரியாக சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த இயக்கம், சிறந்த சண்டைக்காட்சி என பல பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பிரியா கிருஷ்ணமூரத்தி
அதன்படி சிறந்த தமிழ் படமாக பாரம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம் படத்தை பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட்
இந்த படம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஏற்கனவே தேர்வாகியிருந்தது. இதனிடையே உத்தரகாண்ட் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.

சிறந்த நடிகை
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பத்மாவத் படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது கீர்த்தி சுரேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிகை சாவிரித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடியில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











