தேசிய விருது பெற்ற ‘பாரம்‘.. டீசர் வெளியானது !
சென்னை : 2019ம் ஆண்டு தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படம் பாரம். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.
பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பாரம். இவர் ஒரு இயக்குனர், படத்தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் எடுத்த திரைப்படம் காங்கோ பாய். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவர் அடுத்து இயக்கிய திரைப்படம் தான் பாரம். பாரம் என்றால் தமிழில் சுமை என்ற மற்றொரு அர்த்தமும் உள்ளது. மனைவியை இழந்த இரவு காவலாளியின் வாழ்க்கையே இந்த பாரம் படத்தின் கதை. வாழ்க்கையின் கடைசி நாட்களில் உள்ள காவலாளியை அவரது மகன் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார் என்பதே இந்த படத்தின் முக்கிய கதையாகும்
இது சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றது. ஒரே தமிழ் திரைப்படம் அந்த விழாவில் விருதை வென்றது. மேலும், இப்படம் கோவாவில் நடந்த இந்திய இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் அரங்கேறியது.

இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து மற்றும் படத்தொகுப்பும் செய்தவர் பிரியா கிருஷ்ணசாமி. ஒரு படத்தில் இத்தகைய உழைப்பை முழுமையாக கொடுத்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்று பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குனர் வெற்றி மாறன் வழங்குகிறார் இதற்கு முன்பு விசாரணை மற்றும் காக்கா முட்டை போன்ற படங்களை வெற்றி மாறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











