பாட்ஷா இஸ் பேக்.. ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு டிஜிட்டலில் திரையிடப்படுகிறது பாட்ஷா!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 69வது பிறந்த நாள் நாளை மறுநாள் டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, பாட்ஷா திரைப்படம் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு காட்சிகளாக வெற்றி திரையரங்கில் திரையிடப்படுகிறது.
பாட்ஷா திரைப்படம் மட்டுமின்றி, ரஜினி ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களும் கூடவே காத்திருக்கின்றன.

ரஜினி பிறந்தநாள்
1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி சிவாஜி ராவாக பிறந்து சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ள ரஜினிகாந்தின் 69வது பிறந்த நாள் விழா வரும் டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வெற்றி தியேட்டர்
ரஜினியின் பிறந்த நாளை பலரும் பலவிதமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வெற்றி திரையரங்கம் ரஜினி நடிப்பில் வெளியான மெகா பிளாக்பஸ்டர் திரைப்படமான பாட்ஷா திரைப்படத்தை டிஜிட்டலில் திரையிடுகிறது.

3டி கண்ணாடி
பாட்ஷா திரைப்படம் மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி 3டி மற்றும் 2.0 3டி டிரைலர்களையும் பாட்ஷா படத்தின் இடைவேளையின் போது திரையிட வெற்றி தியேட்டர் ஏற்பாடு செய்துள்ளது.

தர்பார் கொண்டாட்டம்
தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சும்மா கிழி பாடலின் லிரிக் வீடியோக்களையும் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸாக திரையிட தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், ரஜினியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு உருவாக்கப்படும் ஸ்பெஷல் மாஸ் அப்களும் திரையிடப்படுமாம்.

ஷோ எப்போ?
வெற்றி தியேட்டரில் பாட்ஷா படம் வரும் டிசம்பர் 11ம் தேதி இரவு 9:50 மணிக்கு திரையிடப்படுகிறது. அதனை தொடர்ந்து டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக காலை 11:20 மணி மற்றும் மாலை 6:20 மணி என இரண்டு காட்சிகள் திரையிடப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











