twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் பாட்ஷாவுக்கு எத்தனை தியேட்டர் தெரியுமா... பிரமித்து நிற்கும் தமிழ் திரையுலகம்!

    By Shankar
    |

    ரஜினியின் எவர்கிரீன் ப்ளாக்பஸ்டர் படமான பாட்ஷா சென்னை மற்றும் செங்கல்பட்டில் மட்டும் 75 அரங்குகளில் வெளியாகி பிரமிக்க வைத்துள்ளது.

    22 ஆண்டுகள் கழித்து வெளியாகும் ஒரு படத்துக்கு இத்தனை அரங்குகள் கிடைத்திருப்பது, ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்தின் ஆதிக்கத்தைக் காட்டுவதாக திரையுலகினர் பிரமிப்புடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Baasha is releasing in 75 plus screens in Chennai and Chengalpattu alone!!

    பாட்ஷாவை அதன் தயாரிப்பாளர்களான சத்யா மூவீஸ், தங்களின் பொன் விழா ஆண்டு வெளியீடாக டிஜிட்டலில் வெளியிட்டுள்ளனர். படத்தின் ஒலி, ஒளி, பின்னணி இசை என அனைத்தையுமே புத்தம் புதிய வடிவில் வெளியிட்டுள்ளனர்.

    இந்தப் படத்தின் வெளியீட்டை ரஜினியின் புதிய படத்துக்கு இணையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் ரசிகர்கள்.

    அதற்கேற்றார் போல, ஏராளமான திரையரங்குகளை பாட்ஷாவுக்கு ஒதுக்கியுள்ளனர்.

    சென்னை மற்றும் செங்கல்பட்டில் மட்டும் 75 அரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் இந்தப் படம் வெளியாகி திரையுலகினரை அதிர வைத்துள்ளது. இவை அனைத்துமே பிரதானமான அரங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இன்றைக்கு ஒரு புதிய படத்துக்கே தமிழகம் முழுவதும் 75 அரங்குகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆனால் 22 ஆண்டுகள் கழித்து வெளியாகும் ஒரு படத்துக்கு தமிழகம் முழுக்க 300 அரங்குகளுக்கு மேல் கிடைத்திருப்பது சாதாரண விஷயமா என்ன!!

    English summary
    Superstar Rajini's Baasha is releasing in 75 plus screens in Chennai and Chengalpattu alone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X