டெக்சாஸ் தலைநகரில் இன்று பாட்ஷா.. 'ஃபன்டாஸ்டிக் ஃபெஸ்ட்' விழாவில் திரையிடல்!

By Shankar

ஆஸ்டின்(யு.எஸ்): அமெரிக்காவின் முக்கிய மாநிலமான டெக்சாஸின் தலைநகர் ஆஸ்டின் மாநகரத்தில் இன்று, செவ்வாய் கிழமை காலை 10:20 க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா படம் திரையிடப்படுகிறது.

உலகம் முழுவதிலிருந்து பலதரப்பட்ட திரைப்படங்களையும் ஒரே விழாவில் திரையிடும் வகையில் 'ஃபன்டாஸ்டிக் ஃபெஸ்ட்' ஆஸ்டின் நகரில் நடத்தப்பட்டு வருகிறது. 13வது ஆண்டாக செப்டம்பர் 21 ம் தேதி முதல் 28ம் தேதி வரை அலமோ ட்ராஃப்ட் ஹவுஸ் திரையரங்கில் படங்கள் திரையிரப்படுகிறது.

Baasha screened in US film festival

மொத்தம் 133 படங்கள் பங்கேற்கின்றன. ஜப்பான் முதல் அமெரிக்கா வரையிலான முக்கிய நாடுகளிலிருந்து படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து 'பாட்ஷா' திரைப்படம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிஜிட்டலில் வெளியான பிரதி இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமை காலை 10:30 மணிக்கு ஒரு காட்சி திரையிடப்பட்டது. இரண்டாவது காட்சி இன்று செவ்வாய் கிழமை காலை 10:20 மணிக்கு திரையிடப்படுகிறது. இங்கு திரையிடப்படும் பெரும்பான்மையான படங்களுக்கு இதுவே ப்ரீமியர் காட்சியாகும். சம்மந்தப்பட்ட திரைப்படத்தின் நடிகர், நடிகைகள், இயக்குநர்களும் கலந்து கொள்வார்கள். மாலை பார்ட்டிகளும் நடக்கும். குறும்படங்களும் திரையிடப்படுகின்றன.

விழாவில் முழுவதும் பங்கேற்க 425 டாலர்கள், 490 டாலர்கள் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிற்பகுதி மட்டும் என்றால் 225 டாலர்கள். அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இந்த திரைப்பட விழா உலகின் முதல் பத்து சிறந்த திரைப்பட விழாக்களில் இடம் பெற்றுள்ளதாக, லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்ற 'உலக திரைப்பட விழா மாநாட்டில்' அறிவிக்கப் பட்டது.

அமெரிக்காவின் முக்கியமான திரைப்பட விழாவில் ஒன்றான 'ஃபன்டாஸ்டிக் ஃபெஸ்ட்' விழாவில், இந்தியாவிலிருந்து ரஜினியின் 'பாட்ஷா' மட்டுமே திரையிடப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திப் படம் எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-இர தினகர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X