Leo - லியோவுக்கு போட்டியாக களமிறங்கும் ரஜினி படம்.. பிளானோடதான் இருக்காங்க போல

சென்னை: Leo Ticket Booking (லியோ டிக்கெட் புக்கிங்) லியோ படத்துக்கு போட்டியாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் களமிறங்கியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Baasha starring Rajinikanth has been released as a competitor to Leo

ட்ரெய்லர்: சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் படம் ஸ்டைலிஷாகவும், ஆக்‌ஷனாகவும் வந்திருப்பது உறுதியாகியிருப்பதாக கொண்டாடுகின்றனர். அதேசமயம் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக ஒரு கருத்து எழுந்திருக்கிறது.

சிறப்பு காட்சி: சூழல் இப்படி இருக்க லியோ படத்துக்குரிய சிறப்பு காட்சிக்கான அனுமதியும் கிடைத்திருக்கிறது. இது விஜய் ரசிகர்கள் உற்சாகப்படுத்தினாலும் ரஜினி ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது. ஏனெனில் ஜெயிலர் படத்துக்கு சிறப்பு காட்சி கிடைக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் வசூலும் ஜெயிலர் படத்தின் வசூலை கண்டிப்பாக முந்திவிடும் எனவும் தளபதி ரசிகர்கள் நம்பிக்கையோடு பேசிவருகின்றனர்.

ப்ரீ புக்கிங்: லியோ படத்துக்கான ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது. ப்ரீ புக்கிங்கில் பல சாதனைகளை லியோ படைத்துவருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும் புக்கிங் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக அசுர வேகத்தில் டிக்கெட்டுக்களை புக் செய்துவருகின்றனர்.

Baasha starring Rajinikanth has been released as a competitor to Leo

பாட்ஷா: இந்நிலையில் லியோ படத்தின் ஃபீவர்தான் தமிழ்நாடு முழுக்க இருக்கிறது. இந்த சூழலில் அந்த ஃபீவரை கொஞ்சம் தணிக்கும் விதமாக திருப்பூர் சக்தி சினிமாஸில் பாட்ஷா படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கான டிக்கெட் புக்கிங்கும் இன்று ஓபன் ஆகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் லியோவுக்கு போட்டியாக பாட்ஷா படத்தை வேண்டுமென்று இறக்கியிருக்கிறார்களோ என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X