பாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்!

சென்னை: பாட்ஷா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பியாக நடித்த நடிகர் சஷி குமாரின் மகன் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

Recommended Video

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்

கன்னட சினிமாத்துறையின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சஷி குமார். கன்னட மொழியில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சஷி குமார்.

கன்னட சினிமாவில் சுப்ரீம் ஹீரோ என்று அழைக்கப்படும் சஷி குமார் தமிழில் வெளியான பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

சொல்லுங்க நீங்க யாரு?

சொல்லுங்க நீங்க யாரு?

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தம்பியாக சிவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் சஷிகுமார். அந்தப் படத்தில் ரஜினியிடம் அவர் பேசும் சொல்லுங்க நீங்க யாரு? என்ற டயலாக் இன்றளவும் பெரும் பிரபலம். இந்நிலையில் நடிகர் சஷி குமாரின் மகன் அக்ஷித் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.

பெண்களை மதிக்க வேண்டும்

பெண்களை மதிக்க வேண்டும்

அக்ஷித் நடிக்கும் படத்திற்கு சீதாயணம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என பன் மொழி படமாக தயாராகியுள்ளது. பெண்களை மதிக்க வேண்டும் என்ற மெஸேஜுடன் குடும்ப சித்திரமாக உருவாகும் இந்த படத்தை பிரபாகர் இயக்கியுள்ளார்.

கலகலப்பான முறையில்..

கலகலப்பான முறையில்..

சீதாயணம் திரைப்படத்தின் கதை ஒரு இளம் ஜோடியை சுற்றி வருகிறது. ஹீரோவின் காதல் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுவதாகவும் அவர் நம்புகிற மற்றும் மதிக்கும் ஒருவரை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படும் பது அவர் அதைச் செய்கிறாரா? என்பதை ஒரு கலகலப்பான முறையில் சொல்வதாக உள்ளது இந்தப் படம்.

63 நாட்களில்

63 நாட்களில்

இந்தப் படத்தில் அனாஹிதா பூஷன் ஹீரோயினாக நடிக்கிறார், வித்யு ராமன், விக்ரம் சர்மா, அஜய் கோஷ், மதுநந்தன் மற்றும் சுதர்சன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் உபேந்திர குமாரின் மகன் பத்மநாப் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

63 நாட்கள்

63 நாட்கள்

இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படம் பாங்காக், மங்களூர், அகும்பே, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 63 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X