ஹேமமாலினி மகள் திருமண வரவேற்பு: வந்து வாழ்த்திய வேகத்தில் கிளம்பிய மோடி

By Siva

மும்பை: நடிகை ஹேமமாலினியின் இரண்டாவது மகள் அஹானா தியோலின் திருமண வரவேற்பு நேற்று மும்பையில் நடைபெற்றது.

நடிகை ஹேமமாலினி, நடிகர் தர்மேந்திரா தம்பதியின் இரண்டாவது மகள் அஹானா தியோல் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் வைபவ் வோராவை மணந்தார்.

இதையடுத்து நேற்று மும்பையில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

மணமக்கள்

மணமக்கள்

அஹானா, வைபவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் தவிர அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சன் குடும்பம்

பச்சன் குடும்பம்

அஹானாவின் திருமண வரவேற்புக்கு அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா, மகன் அபிஷேக் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ரேகா

ரேகா

அமிதாப் குடும்பத்தினர் வந்த 4வது நிமிடத்தில் நடிகை ரேகா தனக்கே உரிய ஸ்டைலான பட்டுப்புடவை, செமத்தியான மேக்கப்பில் அழகாக வந்திறங்கினார்.

இஷா

இஷா

அஹானாவின் மூத்த சகோதரி இஷா தியோல் தனது கணவரும், தொழில் அதிபருமான பரத் தக்தானியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கானுக்கு ஹேப்பி நியூ இயர் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம். அதனால் அவர் காலில் பெரிய கட்டுடன் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்தார்.

தீபிகா

தீபிகா

பாலிவுட்டின் பிசியான நாயகியான தீபிகா படுகோனே நிகழ்ச்சிக்கு சேலையில் வந்திருந்தார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

ராம் லீலா படத்தின் நாயகனும், தீபிகாவின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் ரன்வீர் சிங் தாடி, மீசை இல்லாமல் வந்திருந்தார்.

ராம்தேவ்

ராம்தேவ்

யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் எம்.பி. அமர் சிங் ஆகியோரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சோனாக்ஷி

சோனாக்ஷி

பாலிவுட்டில் ரீமேக் படங்கள் என்றால் இயக்குனர்களின் நினைவுக்கு சட்டென்று வரும் நாயகி சோனாக்ஷி சின்ஹா கலக்கலாக வந்திருந்தார்.

ஜூஹி

ஜூஹி

நடிகையும், ஷாருக்கானின் தோழியுமான ஜூஹி சாவ்லா தனது கணவருடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ஹேமமாலினி

ஹேமமாலினி

இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட திருப்தியில் தர்மேந்திரா, ஹேமமாலினி.

ஷபானா

ஷபானா

இந்தி திரைப்பட பாடல் ஆசிரியரான ஜாவித் அக்தர், தனது மனைவியும், நடிகையுமான ஷபானா அஸ்மியுடன் ஹேமமாலினி வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார்.

பூனம்

பூனம்

சோனாக்ஷி சின்ஹா தனது தாய் பூனம் சின்ஹாவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ஹேமா

ஹேமா

அம்மோ என் பொண்ணுங்க இரண்டு பேருக்கும் திருமணமாகிடுச்சு. அதற்குள் காலம் ஓடிவிட்டது என்று நினைக்கிறாரோ ஹேமா?

மோடி

மோடி

குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்திய வேகத்தில் கிளம்பிவிட்டார். ஹேமமாலினி பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X