20 வருஷத்திற்கு பிறகும் அதே எனர்ஜி..பாபா ரீ ரிலீஸ்..கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் ரீ ரிலீஸாகி உள்ளதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாள் டிசம்பர் 12ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருஷமும், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு புது படங்களோ அல்லது புதுப்பட அறிவிப்போ வெளியாவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு பாபா படம் ரீ ரிலீஸாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பாபா

பாபா

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாஇயக்கத்தில் ரஜினிகாந்த் திரைக்கதை அமைத்து தயாரித்த திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில், ரஜினிகாந்த், மணிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமணி, எம்.என்.நம்பியார், ரம்யா கிருஷ்ணன், சுஜாதா, சீமா ஆகியோர் நடித்திருந்தார்கள். இசைபுயல் ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

மகா அவதாரம் பாபாஜி

மகா அவதாரம் பாபாஜி

மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் நாத்திகராக இருக்கும் ரஜினிக்கு பாபாவின் அருள் கிடைக்கிறது. இதையடுத்து அவருக்கு 7 மந்திரங்களை பாபா கொடுக்கிறார். ஆனால், நாத்திகரான ரஜினி அந்த மந்திரத்தை சோதனை செய்து பார்த்து வீணாக்கி விடுகிறார். கடைசியாக அவருக்கு இறைவன் மீது நம்பிக்கை வந்து வாழ்க்கை ஓர் மாயை என்பதை புரிந்து கொண்டு பாபாஜியுடன் சென்று விடுவதுதான் கதை.

புதிய தொழில்நுட்பத்துடன்

புதிய தொழில்நுட்பத்துடன்

பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் புது பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங், அதோடு பாபா படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார். படத்தின் ஆரம்பத்தில் அவரது உரையாடலோடு படம் தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு மீண்டும் மெருகேற்றியுள்ளனர்.

எனர்ஜி குறையல

எனர்ஜி குறையல

இந்நிலையில், டிசம்பர் 10ந் தேதியான இன்று பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. புயலாவது, மழையாவது என பாபா திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் ரசித்து பார்த்தார்கள். 20 வருஷத்திற்கு முன்னாடி பார்த்த படம் இருந்தாலும் படத்தில் இருக்கும் எனர்ஜி கொஞ்சம் கூட குறையவே இல்லை சும்மா சூப்பரா இருக்கு என்றார்.

வெறித்தனம் வெறித்தனம்

வெறித்தனம் வெறித்தனம்

அப்போ படம் பார்த்ததற்கும், இப்போ படம் பார்ப்பதற்கும் வேறமாதிரி வெறித்தனமாக இருக்கு. இருந்தாலும், பழைய பாபா படத்தில் சில எமோஷனல் காட்சிகள் இருக்கும். அதை எடிட் செய்து தூக்கி விட்டார்கள் அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்றார் ஒரு ரசிகர்.

லதா ரஜினிகாந்த் மகிழ்ச்சி

லதா ரஜினிகாந்த் மகிழ்ச்சி

தியேட்டரில் பாபா ரீ ரிலீஸாகி உள்ளதை முன்னிட்டு ரசிகர்களோடு ரசிகராக படம் பார்த்த, லதா ரஜினிகாந்த், முன்பு படம் பார்க்கும் போது என்ன எனர்ஜி இருந்ததோ, அதே எனர்ஜிதான் இப்போதும் இருக்கிறது. அப்போது வேறுவிதமான எமோர்ஷனல் இருந்தது, ஆனால், இப்போது மகிழ்ச்சி கலந்த எமோர்ஷனல் இருக்கு. இப்போது இருக்கும் இளம் ரசிகர்களுக்கு இந்த படத்தை பற்றிய புரிதல் இருப்பதை பார்க்க முடிகிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X