»   »  பாபா சாகேப்... தமிழில் அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு!

பாபா சாகேப்... தமிழில் அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசியலமைப்பின் பிதாமகன் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் பாபா சாகேப் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்குகின்றனர்.

படத்தைத் தயாரித்து இயக்குகிறார் அஜய்குமார்.

Baba Saheb... a movie on Dr Ambedkar

தனது இந்த முயற்சி குறித்து அஜய்குமார் கூறுகையில், "டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்கையை மையக் கருவாக வைத்து உருவாகவிருக்கும் திரைப்படம்தான் பாபா சாகேப். இது சாதி தலைவரின் படம் அல்ல, தேசத் தலைவரின் படம் என்பதை கருத்தாகக் கொண்டு உருவாக்குகிறோம்.

தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்கையை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகின்றன. நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்குகிறேன்.

அட்டன்பிரோ என்ற வெளிநாட்டுக்காரர் காந்தியின் வாழ்கையை ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் நம் தேச தலைவரின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்ககூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பாபா சாகேப்.

Baba Saheb... a movie on Dr Ambedkar

அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000 பேர்க்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை. இறுதியாக எங்கள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் அவர்கள் ஆய்வுக்கூடம் திரைப்படத்தின் நாயகன் ராஜ கணபதியை அறிமுகம்செய்தார்.

அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல உள்ளதால் அவரை தேர்வு செய்தோம், மேலும் இத்திரைப்படத்திர்காக அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும் பாரதியார், பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

Baba Saheb... a movie on Dr Ambedkar

இவ்விழாவை அனைத்து இந்திய பாதுகாப்பு ஜெச்விஎஃப் டாக்டர் அம்பேத்கர் தேசிய தொழிலாளர் சங்கத்தால் நடத்தி சிறப்பிக்கப்படவிருக்கிறது. ஜூன் 19-ம் தேதி வள்ளுவன் வாசுகி மண்டபம், அஜய் விளையாட்டு அரங்கம் அருகில், ஜெக ஜீவானந்தம் சிலை சாலை, முருகப்பா கல்லூரி பஸ் ஸ்டாப், ஆவடியில் இந்த விழா நடக்கிறது," என்றார்.

English summary
Ajaykumar, a denutant director and producer is going to produce a movie on Dr Ambedkar life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil