இந்த வயசுல சின்ன பொண்ணு கேட்குதா?..ஆமா..உனக்கு ஏன் வயிறு எரிகிறது...பப்லுவின் நெத்தியடி பதில்!

சென்னை : 57வயதான பப்லு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என இணையத்தில் பப்லுக்கு எதிராக பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்த விவகாரம் புயலை கிளப்பியதை அடுத்து நடிகர் பப்லு பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது காதலியுடன் பேட்டி கொடுத்துள்ளனர்.

எங்களது உறவு முறை பற்றி பலரும், கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இந்த வயதிலும்,யாருக்கும் இப்படி ஒரு பெண்கிடைக்கமாட்டாள் எனக்கு கிடைத்து இருக்கிறது. இதுல உங்களுக்கு ஏன் வயிறு எறிகிறது என்றார்.

பப்லு

பப்லு

என் முதல் மனைவி பீனாவை காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டேன். நானும் எனது மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டதால், எங்களால் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க முடியவில்லை. தினமும் சண்டை வந்ததால், நான் தனியாக வந்துவிட்டேன். 24 வயது பெண்ணை திருமணம் செய்வதால், பீனாவிற்கு நிச்சயம் வருத்தம் இருக்கும். இத்தனை ஆண்டுகள் விவாகரத்து வாங்காமல் இருந்தோம். ஆனால், 3 மாதத்திற்கு முன்பு விவாகரத்து கிடைத்துவிட்டது.

காதல் மற்றும் சுகத்தை கொடுத்தால்

காதல் மற்றும் சுகத்தை கொடுத்தால்

6 வருடங்களாக மனைவியை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்தேன். எனக்கு வீட்டில் அன்பு கிடைத்து இருந்தால் நான் வெளியில் போய் இருக்கமாட்டேன். மிகுந்த மன வேதனையில், தனிமையில் இருந்தேன் இந்த நேரத்தில் தான், இவளின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு நிறைய மரியாதை நிறைய காதல் மற்றும் சுகத்தை கொடுத்து இருக்கிறாள். என் முதல் மனைவி கொடுக்கவில்லை அவள் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

உனக்கு ஏன் வயிறு எரிகிறது

உனக்கு ஏன் வயிறு எரிகிறது

எங்கள் இருவருக்கும் திருமணம் இன்னும் நடக்கவில்லை, இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம். எங்கள் இருவரை பற்றி இவ்வளவு வைரலாக பேச காரணமே எங்கள் வயது தான். 57 வயதில் திருமணமா? இந்த வயதில் பொம்பள சோக்கு கேக்குதா? பணம் இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவியா என கேட்கின்றனர். ஆமாம், நான் சம்பாதிக்கிறேன், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் உனக்கு ஏன் வயிறு எறிது என நச்சுனு பதில் கொடுத்தார்.

வயது ஒரு நம்பர்

வயது ஒரு நம்பர்

எனக்கு பிறகு தனது மகனை இவள் நிச்சயம் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வயது என்பது ஒரு நம்பர் நான் இப்போதும் அழகாகவே இருக்கிறேன் என்றார். மேலும், வயதானவனை ஏன் காதலிக்கிறாய் என பலர் கேட்டனர். ஆனால், அதற்கு அவள் எனக்கும் வயது ஆகும், நான் இப்படியே இளமையாக இருக்க மாட்டேன், இன்றைய சந்தோஷம் தான் முக்கியம் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X