இரண்டு பேருக்கும் செட்டாகல.. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்.. சந்தேகத்தால் வந்த பிரச்சனை? ஷீத்தல் விளக்கம்!
சென்னை: 23 வயதான ஷீத்தலை காதலித்து லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்த நடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார். இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், முதன்முதலாக பிரிந்தது குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார் ஷீத்தல்.
நான் வாழவைப்பேன் என்ற படம் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் பப்லு. அஜித், சிம்ரன் நடித்த 'அவள் வருவாளா' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார். இவருக்கு திரைப்பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து சின்னத்திரை பக்கம் வந்த இவர், அரசி, வாணி ராணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகர் பிரித்விராஜ்: நடிகர் பப்லு தனது முதல் மனைவி பீனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த 24 வயதான ஷீத்தல் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். ஒரு நிகழ்ச்சியில் ஷீத்தலை தனது மனைவி என்று கூறியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து பேட்டி அளித்த பப்லு, யாருமே இல்லாமல் தனியாக இருந்த எனக்கு ஆறுதலாக ஷீத்தல் இருந்தார் என்று கூறினார். மேலும், 56 வயதான பப்லு 24வயது பெண் கேட்குதா இணையவாசிகள் எழுப்பிய கேள்விக்கு ஆமாம், எனக்கு பொம்பள சோக்கு கேட்குது என்று தில்லா பதில் அளித்து இருந்தார்.
பிரிந்தனர்: இதையடுத்து, ஷீத்தல், பப்லுவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்துமே தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி, பப்லுவுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சூசகமாக கூறினார். இதன் பிறகு பேட்டி அளித்த பப்லு நாங்கள் பிரிந்து விட்டோம் என்று மட்டுமே கூறியிருந்தார். ஆனால், பிரிவுக்கான காரணத்தை அவர் சொல்ல விரும்ப வில்லை என்று கூறியிருந்தார்.
விரிசல் அதிகமானது: இந்த நிலையில், தற்போது ஷீத்தல், யூடியூப் சேனல் ஒன்று பேட்டி அளித்துள்ளார். இதில், நான் இதற்கு முன் பல போட்டிகளில், Age is just number தான் என்று சொல்லி இருக்கிறேன். இப்பவும் நான் அதைத்தான் சொல்லுகிறேன். ஒருவரை பிடித்து இருந்தால் அவர்கூட இருக்க பிடிக்கவில்லை என்றால்,உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கொண்டு இருக்காதீர்கள். நானும், அவரும் பல முறை எங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய பல முறை முயற்சி செய்தோம். ஆனால், அதைபற்றி பேசி பேசி மீண்டும் மீண்டும் எங்களுக்குள் விரிசல் அதிகமாகிக்கொண்டேதான் சென்றததே தவிர அது சரியாகவே இல்லை.
மிஸ் பண்ணேன்: கடைசியில் எனக்கு இரண்டு ஆப்ஷன் தான் இருந்தது ஒன்று எல்லாத்தையும் பொருத்துக்கொண்டு வாழ வேண்டும் இல்லை என்றால் விலகிவிட வேண்டும். நான், இதற்கு மேல் முடியாது என்பதால் விலகிவிட்டேன். ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்த்துவிட்டு இவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை நான் மிகவும் மிஸ் பண்ணேன் ஆனால், வேறு வழியில்லை என்பதால்,என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். ஊருக்கு சென்று அம்மாவுடன் இருந்தேன் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கிறேன்.
பணத்தை வாங்கிக்கொண்டு பிரிந்தேனா: அதே போல, பணத்தை வாங்கிக்கொண்டுதான் பப்லுவை விட்டு பிரிந்ததாக பலர் பேசினார்கள். உண்மையில் அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நான் எந்த பணத்தையும் வாங்கவில்லை. பிரிய முடிவு செய்ததும், அவர் எனக்காக வாங்கிக் கொடுத்த மோதிரம், பரிசு பொருட்கள் என அதையும் அவரிடம் கொடுத்துவிட்டுத்தான் வந்தேன் என்று அந்த பேட்டியில் ஷீத்தல் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











