பப்லு பிரித்விராஜிடம் இருந்து பல லட்சம் சுருட்டிட்டு ஓடினாரா மாஜி காதலி.. உண்மையை உடைத்த ஷீத்தல்!
சென்னை: அஜித்தின் 'அவள் வருவாளா' முதல் ரன்பீர் கபூரின் 'அனிமல்' படம் வரை பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் படையையே வைத்திருக்கிறார் பப்லு பிரித்விராஜ். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த பப்லு பிரித்விராஜ் தனது படங்கள் சரியாக ஓடாத நிலையில், வில்லனாக மாறி நடிக்கத் தொடங்கினார்.
அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத நிலையில், சீரியல் பக்கம் தாவினார். அங்கேயும் பல பிரச்சனைகள் துரத்திய நிலையில், சில காலம் பிரேக் விட்ட அவர் தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

பப்லு பீனா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தை ஒன்று உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட பிரிவு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த பப்லு மலேசியாவை சேர்ந்த இளம் பெண் ஷீத்தல் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் கூறி வந்தார். ஆனால், ஜிம் டிரெய்னருடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஷீத்தல் அவரை திருமணம் செய்து பப்லுவுக்கு பல்பு கொடுத்துவிட்டார்.
ஷீத்தல் திருமணம்: பப்லுவின் முன்னாள் காதலியான ஷீத்தல் திடீரென தடகளவ் வீரர் மற்றும் ஜிம் டிரெய்னரான சுமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டது பப்லு பிரித்விராஜை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் முடிந்த நிலையில், ஷீத்தலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அதிகப்படியான ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக ஷீத்தல் அளித்துள்ள பேட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
பல லட்சம் சுருட்டிட்டு ஓடினேனா: பப்லு பிரித்விராஜுக்கு 50 வயதுக்கு மேல் ஆகிறது. 23 வயது நிரம்பிய ஷீத்தல் அவரை காதலித்து வரும் போதும் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் கேலி கிண்டல்கள் வெடித்தன. இந்நிலையில், பப்லுவை விட்டு ஷீத்தல் இன்னொருவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், பப்லுவிடம் இருந்து பல லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு ஷீத்தல் இன்னொருவரை மணந்துக் கொண்டார் என்றும் காதல் எல்லாம் சும்மா டிராமா, காசுக்காகவே பப்லுவிடம் சுற்றியிருக்கிறார் ஷீத்தல் என ட்ரோல்கள் குவிந்து வரும் நிலையில், அதெல்லாம் கிடையவே கிடையாது என ஷீத்தல் விளக்கம் அளித்துள்ளார்.

பரிசு பொருட்களையும் கொடுத்துட்டேன்: பப்லு தனக்கு கொடுத்த அனைத்து பரிசுப் பொருட்களையும் திரும்ப அவருக்கே கொடுத்துவிட்டேன். அவர் எனக்கு கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்டான மோதிரத்தையும் திரும்ப அவரிடம் கொடுத்துவிட்டேன். இதற்கு மேல் அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். அவருடன் இருக்கும் போது அது எனக்கு சரி என பட்டது செய்தேன். இப்போ நான் செய்வது சரி என தோன்றுவதால் அவரை பிரிந்து மனதுக்கு பிடித்த இன்னொருவருடன் வாழ்ந்து வருகிறேன். சோஷியல் மீடியாவில் தேவையில்லாமல் கண்டபடி பேசுபவர்கள் பேசட்டும். நான் என் வாழ்க்கையை என் இஷ்டப்படித்தான் வாழ முடியும் என ஷீத்தல் அனைத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார். ஷீத்தல் திருமணம் செய்து பிரிந்த நிலையில், பப்லு அடுத்து யாரை காதலிக்கப் போகிறார் என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











