23 வயது இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா பப்லு? தீயாய் பரவும் புகைப்படம்!
சென்னை: சினிமா, சீரியல் என அசத்தி வரும் சீனியர் நடிகர் பப்லுவுக்கு 56 வயதாகிறது. இந்நிலையில், அவர் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பப்லு என்கிற பிருத்விராஜ் 1977ம் ஆண்டு நான்கு சுவர்கள் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
சிவாஜியின் நீதி, டாக்டர் சிவா, எம்ஜிஆரின் நாளை நமதே உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார்.

சினிமா டூ சீரியல்
வானமே எல்லை, புதிய மன்னர்கள், நடிகர் அஜித்தின் அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த பப்லு என்கிற பிருத்விராஜ் தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்த நிலையில், சீரியல் நடிகராக மாறி விட்டார். ஆனால், தொடர்ந்து தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மர்ம தேசம் சீரியலில் தொடங்கி, வாணி ராணி, அன்பே வா என ஏகப்பட்ட சீரியல்களில் இவர் நடித்து வருகிறார்.

திருமணம்
1994ம் ஆண்டு பீனா எனும் பெண்ணை நடிகர் பிரித்விராஜ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அடுத்த ஆண்டே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஹத் எனும் பெயரை வைத்து அந்த குழந்தையை வளர்த்து வந்தார் பிருத்விராஜ். தனது மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதை அறிந்து ரொம்பவே மன உளைச்சல் அடைந்தார்.

ஆட்டிசம் குறைபாடு
நடிகர் பிருத்விராஜின் மகன் அஹத்துக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமா மற்றும் சீரியலில் இருந்து ஓய்வெடுத்து மகனை குணப்படுத்த ஏகப்பட்ட சிகிச்சைகளையும் பப்லு மேற்கொண்டார். மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த நிலையிலேயே பப்லுவுக்கும் அவரது மனைவி பினாவுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

2வது திருமணம்
இந்நிலையில், நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த வயதிலும் தான் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு இளமையாக இருக்க இவர் தான் காரணம் என பப்லு பேசியதை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 56 வயதாகும் பப்லு இரண்டாவதாக 23 வயதுடைய மலேசிய பெண்ணுக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

பிசினஸ் உதவி
பப்லு சினிமாவை தாண்டி சில பிசினஸ்களையும் செய்து வந்ததாகவும், அவருக்கு பிசினஸில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இந்த மலேசிய பெண் தான் அவருக்கு உதவினார் என்றும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், திருமணம் செய்து கொண்டனர் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











