ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்..ஆடம்பரமான ரூம்.. இளம் மனைவியுடன் வயசுக்கு மீறி அலும்பு பண்ணும் பப்லு!
சென்னை நடிகர் பப்லு பிரித்விராஜ் ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் ஆடம்பரமான ரூமில் இளம் மனைவியுடன் அலும்பு பண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ்.
இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழியில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பப்லு பிரித்விராஜ் :சீரியலில் பிஸியாக நடித்து வரும் பப்லு பிரித்விராஜ், கடந்த ஆண்டு பொதுநிகழ்ச்சியில், என்னை ஆரோக்கியமாக கவனித்து கொள்வது என் மனைவி தான் என 24 வயது இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இணையவாசிகள், பப்லுவை கண்டபடி விளாசினார்கள்.
கடும் விமர்சனம் : 54 வயதில் 24 வயது பெண் கேட்குதா என்றும், இந்த வயசில் பொம்பள சோக்கு கேக்குதா என்றும் பப்லுவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு எல்லாம் கொஞ்சமும் அசராத பப்லு, என்னை பாருங்க நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன், உடம்பை எப்படி பிட்டாக வைத்து இருக்கிறேன் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான் என்றார்.

ஜாலியான லைப் : மேலும், நாங்கள் இருவரும் ஏதோ கொலை குற்றம் செய்தது போல பலரும் எங்களை கடுமையாக கிண்டல் செய்து விமர்சித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களை எதிர்கொள்ள கஷ்டமாக இருந்தது. ஆனால், இப்போது இதை Fun ஆக எடுத்துக்கொள்கிறோம் என்று இருவரும் தங்களது வாழ்க்கையை ஜாலியாக ரசித்து வாழ்ந்து வருகின்றனர்.

வயசுக்கு மீறி அலும்பு பண்ணும் பப்லு : இந்நிலையில், பப்லு தனது காதல் மனைவியுடன் ஜாலியாக இருக்க, ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டுள்ளார். அந்த ஓட்டலிலேயே மிகவும் காஸ்ட்லியான அறையை தனது காதல் மனைவி ஷீத்தலுக்காக புக் செய்துள்ளார் பப்லு. அதாவது ஒரு நைட்டுக்கு மட்டும் 94 ஆயிரம் வாடகையாம் அதில், வரவேற்பு அறை, அலங்கரிக்கப்பட்ட டைனிங் டேபிள், படுக்கை விரிப்புகள் என அந்த அறையை பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த ரூமில் தனது இளம் மனைவி ஷீத்தலுடன் ஜாலியாக இருக்கப்போவதாக அலப்பறை செய்து இருக்கிறார் பப்லு.


Click it and Unblock the Notifications











