என்னை மடக்க முடியாது.. நான்சென்ஸ் மாதிரி பேசுறீங்க.. நடிகையை வறுத்தெடுத்த பப்லு பிருத்விராஜ்
சென்னை: நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் பிருத்விராஜ். இந்தச் சூழலில் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பப்லு பிருத்விராஜுக்கு சினிமா ஆசை இருந்ததற்கு முன்பே அவரது தந்தைக்கு சினிமா ஆசை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அவர்தான். ஆனால் அவரது கண்ணில் ஒரு குறைபாடு இருந்ததால் அதிலிருந்து நீக்கப்பட்டார். இதை மிகப்பெரும் அசிங்கமாக உணர்ந்த அவரது தந்தை பிறகு போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக மாறிவிட்டார் . தன்னை அசிங்கப்படுத்திய சினிமாவுக்குள் மகனை கொண்டு வந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து எப்படியோ பப்லுவை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.

முன்னணி நடிகர்: குழந்தை நட்சத்திரமாக இருந்த பப்லு வளர்ந்த பிறகும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. பாண்டிநாட்டு தங்கம், சிகரம், அழகன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முக்கியமாக 90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்தார் அவர். சூழல் இப்படி இருக்க பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
விவாகரத்து; லிவிங் டூ கெதர்: பீனாவுக்கும் பப்லுவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்து எந்த விளக்கமும் பிருத்விராஜோ, ஷீத்தலும் கூறாமல் இருந்தனர். அதனையடுத்து தாங்கள் பிரிவதாக அவர்களும் அறிவித்துவிட்டனர்.
ஷீத்தல் அளித்த விளக்கம்: இதுகுறித்து ஷீத்தல் அளித்திருந்த விளக்கத்தில், 'பப்லுவும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தோம்.எங்களது உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால் இருவரும் இப்போது பிரிந்திருக்கிறோம். இரண்டு பேரும் சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக் அமைந்தது. ஆனால் இது இரண்டு பேரும் பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிந்தார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜோதிடம் பற்றிய விவாத நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகைகள் ரேகா நாயர், காதல் சரண்யா, நடிகர் பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய பிருத்விராஜ், 'நேரத்தை வீணாக்காமல் ஜோதிடத்தை நம்பாமல் உங்களை நம்புங்கள்''என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நடிகை ரேகா நாயர், 'உங்களுக்கு தோல் சம்பந்தமான நோய் வரும் என்றால்அது வரும்தான். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த கோயிலுக்கு போக வேண்டும் என்று நமது நாட்டில் இருக்கிறது'என்றார்.
காண்டான பிருத்விராஜ்: அதற்கு பதிலளித்த பிருத்விராஜ், இன்றைய தலைப்பு ஜோதிடம் பற்றியது. கோயில் பற்றியது அல்ல. நீங்கள் குரலை உயர்த்தி பேசாதீங்க. உங்கள் குரலை உயர்த்தி பேசினால் பேசுவது சரி என்று ஆகாது. என்னை நீங்கள் மடக்க முடியாது. நான்சென்ஸ் மாதிரி பேசாதீங்க.. நான்சென்ஸ்'' என்று காண்டாக பதிலளித்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள். மூட நம்பிக்கைகளை நம்பும் ரேகா நாயருக்கு பப்லு தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications