அனிமல் பட சக்சஸ் மீட்.. அவமானப்பட்ட பப்லு பிருத்விராஜ்.. ரன்பீர் கபூர் என்ன செஞ்சாரு தெரியுமா?

மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தின் சக்சஸ் மீட்டில் நடந்த விஷயம் குறித்து நடிகர் பப்லு பிருத்விராஜ் ஓபனாக பேசியிருக்கிறார்.

தெலுங்கில் மெகா ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. சேது படத்தின் அப்டேட் வெர்ஷன் என்று அந்தப் படம் கூறப்பட்டாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்களை சேர்த்தது. அந்தப் படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக்கானது. அந்தப் படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி உள்ளிட்டோரை வைத்து சந்தீப் இயக்கிய படம் அனிமல். இந்தப் படம் கடந்த 2023ஆம் வருடம் ரிலீஸானது.

கடுமையான விமர்சனம்: படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். படத்தில் அதீத வன்முறை காட்சிகள், ஆணாதிக்கம் என பல எதிர்மறையான விஷயங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக படம் பெருத்த அடியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்வரை படம் வசூலித்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Babloo Prithviraj Talks about Animal Movie Success Meet And Ranbir Kapoor
Photo Credit:

செலிபிரிட்டிகளும் விமர்சனம்: ஆனால் படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களே கடுமையான விமர்சனத்தை கொடுத்தனர். பாடகர் ஸ்ரீநிவாஸ், 'அனிமல்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் அனிமல்' என்று கூறியிருந்தார். அதேபோல் நடிகை ராதிகாவும் மறைமுகமாக அனிமலை விமர்சித்திருந்தார். அவர்கள் வரிசையில் கங்கனா ரணாவத்தும் தனது பங்குக்கு, 'பெண்களின் கண்ணியத்தை போக்கும் வகையில் சமீபத்திய படங்கள் வெளியாகின்றன' என்று அனிமலை குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த படம்: இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியது அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கு தாதா சாகேப் விருதும் வழங்கப்பட்டது. இப்போது சந்தீப் ரெட்டி வங்கா தனது அடுத்த பட வேலைகளை தொடங்கியிருக்கிறார். அப்படத்தில் முதலில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

பப்லு பேட்டி: இந்நிலையில் அனிமல் படத்தில் நடித்த பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "அனிமல் படம் கிட்டத்தட்ட 1600 கோடி ரூபாய் வசூலித்தது. அதன் சக்சஸ் மீட் மும்பையில் நடந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன். அப்போது முதலில் பாபி தியோல் பேசினார். அதற்கு பிறகு அனில் கபூர் பேசினார். பிறகு நான் பேசுவதாக இருந்தது. அந்த சமயத்தில் நான் மைக்கை வாங்க கையை நீட்டினேன். உடனே அனில் கபூரோ நான் இன்னும் பேசி முடிக்க்வில்லை என்பது போல் சொல்லி மைக்கை தர மறுத்துவிட்டார்.

அதனை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ரன்பீர் கபூர் என் அருகே வந்து எனது தோளில் கைப்போட்டுக்கொண்டு; அனில் கபூரிடமிருந்து மைக்கை வாங்கி என்னிடம் கொடுத்தார்" என்றார். முன்னதாக பப்லு பிருத்விராஜ் இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸில் பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் கடைசியாக அவர் ஏஸ் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ட்ரெய்ன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X