சுத்தமாக ஒத்துவரவில்லை.. பிடித்தவருடன் இருக்கிறேன்.. பப்லுவின் முன்னாள் காதலி ஓபன் டாக்
சென்னை: நடிகர் பப்லு என்கிற பிருத்விராஜ் தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே நடித்துவருகிறார். சிவாஜி கணேசனின் படங்களில் எல்லாம் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் வலம் வந்த அவர் ஷீத்தல் என்பவரை காதலித்தார். அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஷீத்தலுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த சூழலில் அவர் பப்லு குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
சினிமாவில் நான்கு சுவர்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு. அவரது இயற்பெயர் பிருத்விராஜ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் வளர்ந்த பிறகும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். அதன்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. பாண்டிநாட்டு தங்கம், சிகரம், அழகன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முக்கியமாக 90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்தார் அவர். அஜித் உள்ளிட்ட நடிகர்களுடனும் அவர் நடித்திருக்கிறார்.

சிம்புவுடன் சண்டை: சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு ஃபேமஸ் ஆனாரோ அதேபோல் தனியார் சேனல் ஒன்று நடத்திய ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார் அவர். அந்த நிகழ்ச்சிக்கு சிம்பு நடுவராக இருந்தார். அப்போது அவருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதமும், சண்டையும் அந்த சமயத்தில் பெரும் பேசுபொருளானது. ஆனால் பின் நாட்களில் தான் தெரியவந்தது. அது முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட் செய்யப்பட்ட ஒன்று என்று. இடையில் நடிக்காமல் இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
விவாகரத்து: இதற்கிடையே அவர் பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆட்டிஸம் குறைபாடோடு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் இரண்டு பேருமே சில காரணங்களால் பிரிந்துவிட்டன. பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவரை காதலித்தார். பப்லுவை விடவும் ஷீத்தல் பல வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருமே தங்களது காதலை உறுதி செய்து வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவரும் சமீபத்தில் பிரிந்தார்கள்.
ஷீத்தல் பேட்டி: பப்லுவை பிரிந்த ஷீத்தல் சமீபத்தில் இன்னொருவரை திருமணம் செய்துகொண்டார். அதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அவர். இந்நிலையில் பப்லுவுடனான பிரிவு குறித்து ஒரு பேட்டி அளித்திருக்கும் ஷீத்தல், "பப்லு எனக்கு கொடுத்த அனைத்து பரிசு பொருட்களையும் மீண்டும் அவருக்கே கொடுத்துவிட்டேன். எனக்கு அவர் கொடுத்த விலையுயர்ந்த பரிசு பொருளான மோதிரத்தையுமே அவரிடம் கொடுத்துவிட்டேன்.
பிடித்தவருடன் வாழ்ந்து வருகிறேன்: அவர் எனக்கு பரிசாக கொடுத்த மோதிரத்தையும் மற்ற பரிசு பொருட்களையும் வைத்துக்கொண்டு இனிமேல் நான் என்ன செய்யப்போகிறேன். அதனால்தான் மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டேன். பப்லுவுடன் இருப்பது எனக்கு சுத்தமாக சரிப்பட்டு வராது என்று தோன்றியது. அப்போது சேர்ந்திருப்பது சரி என்று தோன்றியது சேர்ந்திருந்தேன். அடுத்து பிரிவது சரி என்று தோன்றியது. இப்போது நான் அவரை பிரிந்து எனது மனதுக்கு பிடித்த இன்னொருவருடன் வாழ்ந்துவருகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











