Atlee: தளபதி விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை சொன்ன அட்லீ.. வாயை பொளந்துட்டு பார்த்த பாலிவுட் பிரபலங்கள்!
மும்பை: இயக்குநர் அட்லீ குறித்து நடிகர் விஜய் பேசுகையில், நான்கு பந்தில் டபுள் ஹாட்ரிக் கோல் அடித்தவர் எனக் கூறினார். அட்லீ படங்கள் குறித்து என்னதான் பல விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டாலும், விஜய் கூறியது ஏற்புடையதுதான், மறுப்பதற்கில்லை. தனது முதல் படமான ராஜா ராணி, சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறியது. அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த நான்கு படங்களும் செம ஹிட்டான படங்களாக மாறி வசூலில் சாதனை படைத்தது. இதைத்தான், நான்கு பந்தில் டபுள் ஹாட்ரிக் கோல் அடித்தவர் அட்லீ என விஜய் குறிப்பிட்டார்.
விஜய்யை வைத்து, பிகில் படத்தினை இயக்கிய பின்னர், அட்லீயை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் அழைத்து, தனக்கு ஒரு படம் பண்ணச் சொன்னார். ஷாரூக்கானின் அழைப்பினை ஏற்று, பாலிவுட்டுக்குச் சென்ற அட்லீ, ஜவான் படத்தினை இயக்கினார். தனது முதல் பாலிவுட் படத்திலேயே, ரூபாய் 1,000 கோடிகள் வசூலை அள்ளும் படத்தினை இயக்கி மிரட்டிவிட்டார். முதலில், பாலிவுட் வட்டாரத்தில், ' ஷாரூக்கானுக்கு என்ன ஆச்சு? யாரு ஒரு தமிழ் பட இயக்குநரைக் கூட்டிவந்து, அவருக்கு தனது கால்ஷீட்டைக் கொடுத்தது மட்டும் இல்லாமல், படத்தையும் அவரே தயாரிக்கவும் செய்கின்றார்' என பேசிக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள் பலர்.

ஆனால் ஜவான் படத்தின் வெற்றி, மற்றும் ஜவான் படத்தின் தரத்தினைப் பார்த்து பாலிவுட் உலகமே மிரண்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். அதன் பின்னர், பாலிவுட் சினிமாவில், அட்லீ மாபெரும் ஸ்டாராக மாறிவிட்டார். படம் இயக்கச் சென்ற அட்லீ, தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தினை தயாரித்து ரிலீஸ் செய்யவும் முடிவு செய்து, அந்தப் படத்தினை ரிலீஸ்க்கும் கொண்டுவந்துவிட்டார். விஜய்யை வைத்து தான் இயக்கிய தெறி படத்தின், ஹிந்தி ரீமேக்கைத்தான், அட்லீ தயாரித்துள்ளார். படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அட்லீ: படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்திற்கு பேபி ஜான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் வரும், 25ஆம் தேதி அதாவது கிருஸ்துமஸ்க்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் படக்குழுவினருடன் இணைந்து, தயாரிப்பாளர் அட்லீயும் மும்முரமாக களமிறங்கியுள்ளார். இது தொடர்பாக, படக்குழுவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதில் அட்லீ, தளபதி விஜய் ஸ்டைலில், ஒரு குட்டிக் கதை கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

குட்டிக் கதை: அதாவது, ஒரு ஏழை ஒருவர் கடும் குளிரில், லேசான உடை அணிந்து சாலையில் நடந்து போய்க்கொண்டு உள்ளார். அப்போது அந்த வழியே காரில் வந்த பணக்காரர், தனது காரை நிறுத்திவிட்டு, இப்படி கடும் குளிரில் அவஸ்தைப் படுகின்றீர்களே, உங்களிடம் கம்பளி இல்லையா எனக் கேட்க, ஏழையோ, இல்லை எனக் கூறியுள்ளார். உடனே, பணக்காரரோ, இங்கேயே இருங்கள், நான் உங்களுக்கு கம்பளி கொண்டு வருகின்றேன் எனக் கூறிவிட்டு தனது காரில், வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இரண்டு விஷயம்: வீட்டுக்குப் போனதும் மனைவி, குழந்தைகளைப் பார்த்ததும், ஏழையை மறந்துவிட்டார். மறுநாள் காலையில்தான், அந்த ஏழையிடம் கம்பளி கொண்டுவருவதாக கூறியது நினைவுக்கு வந்துள்ளது. உடனே அந்த ஏழையைப் பார்க்க, பணக்காரன் சென்றான். ஆனால், ஏழை இறந்துவிட்டார். இந்தக் கதையில் மொத்தம் இரண்டு பாடங்களை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். ஒன்று, நிறைவேற்ற முடியவில்லை என்றால் யாருக்கும் உத்திரவாதம் கொடுக்ககூடாது.

தளபதி: அதேநேரத்தில், நமது வாழ்க்கையில், நமக்கு சம்மந்தமே இல்லாத யாரையும் எதற்காகவும் நம்பக் கூடாது. அம்மா, மனைவி, குழந்தைகளை நம்பலாம். ஒரு பொய் ஒருவரைக் கொன்று விட்டது, தனது நம்பிக்கையை மற்றொருவர்மீது வைத்ததால், ஒரு உயிர் போய்விட்டது எனக் கூறினார். இந்தக் கதையைக் கேட்ட பேபி ஜான் படக்குழுவினர் மட்டும் இல்லாமல், ரசிகர்களும் வாயைப் பொளந்துட்டு கேட்டர்கள் என்றுதான் கூறவேண்டும். இது தொடர்பான வீடியோவைப் பார்த்தவர்கள், அட்லீ, தளபதி விஜய் போலவே குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாரே எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











