Baby John X Review: பேபி ஜான் படம் எப்படி இருக்கு.. ட்விட்டரை அலறவிடும் ரசிகர்கள்.. அட்லீ செம ஹேப்பி

மும்பை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தெறி. இதில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இவர்களது நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்தார். இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கினை அட்லீ தயாரிக்க வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பேபி ஜான் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று அதாவது, டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

படம் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது என்னவென்றால் அது, இந்தப் படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தது. இது ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்று என்பதால், சல்மான் கானின் காட்சிக்கு ஒட்டுமொத்த பாலிவுட் உலகமுமே ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றது. குறிப்பாக ரசிகர்கள் சல்மான் கானின் இண்ட்ரோ காட்சியை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

baby john atlee varun dhawan

ரசிகர் ஒருவர், ஏஜெண்ட் பாய்ஜான் கதாபாத்திரம் யாருமே எதிர்பார்க்காத கதாபாத்திரம். கதாபாத்திர வடிவமைப்பும் அதனை வெளிக்கொண்டு வந்த விதமும் சிறப்பாக உள்ளது. அட்லீ இந்தப் படத்திலும் நீங்கள் சம்பவம் செய்துவிட்டீர்கள். வருண் தவான் மற்றும் பேபி ஜான் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு ரசிகர், சல்மான் காட்சியைப் பகிர்ந்து, " ஒரு பெரிய ஸ்டார் நடிகரை எப்படி பயன்படுத்தவேண்டும், அவர்களுக்கான இண்ட்ரோவை எப்படிக் கொடுக்க வேண்டும் என தென்னிந்திய இயக்குநர்களுக்கு மட்டுமே தெரியும், அந்த வகையில் பேபி ஜான் படக்குழுவினர் மிரட்டி விட்டுள்ளனர். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

baby john atlee varun dhawan

சல்மான் கான்: சல்மான் கானை கேமியோ கதாபாத்திரம் செய்யவைத்து படத்தை மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக மாற்றிவிட்டீர்க்கள். சல்மான் கான் காட்சிக்காகவே, தியேட்டரில் படத்தைப் பார்க்கவேண்டும் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். பலரும் சல்மான் கான் காட்சியை மட்டும் புகழ்ந்து கொண்டு இருக்கும்கோது சில ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக படம் எப்படி உள்ளது என்பது குறித்து பதிவிட்டுள்ளனர்.

எதிர்பார்ப்பு: அதில் ஒரு ரசிகர், " பேபி ஜான் திரைப்படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் படம் அந்த அளவுக்கு இல்லை. தெறி படமே சுமாராகத்தான் இருக்கும். ஆனால் படத்தை விஜய்க்காகவே பார்க்கலாம் எனும் அளவுக்கு விஜய் நடித்திருப்பார். ஆனால் வருண் தவானின் நடிப்பு அந்த அளவுக்கு இல்லை. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. தெறி படத்தின் கதையில் இருந்து மாற்றங்கள் என்றால் அது, வாமிகாவின் கதாபாத்திரம் மற்றும் சல்மான் கானின் கேமியோதான்.

ஓ.கே. ரகம்: இந்த இரண்டுமே படத்திற்கு ஓரளவுக்கு சப்போர்ட் செய்கின்றது. படத்தின் பின்னணி இசை பாராட்டப்படவேண்டியது. ரீமேக் படம் என்றாலும் படத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளதால், படம் கொஞ்சம் ஓ.கே. ரகம்தான் என பதிவிட்டுள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

baby john atlee varun dhawan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X