twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லண்டனில் இளவரசியாக கௌரவிக்கப்பட்ட ”செல்லம்மா”! பேபி சாதனாவுக்கு கிடைத்த அங்கீகாரம்!

    நடிகை பேபி சாதனாவுக்கு இளவரசி டயானா விருது கிடைத்துள்ளது

    |

    Recommended Video

    லண்டனில் இளவரசியாக கௌரவிக்கப்பட்ட செல்லம்மா! சாதனாவுக்கு விருது- வீடியோ

    துபாய்: தங்கமீன்கள் பேபி சாதனாவுக்கு இளவரசி டயானா விருது கிடைத்துள்ளது.

    இயக்குனர் ராமின் தங்கமீன்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. அப்படத்தில் இவர் ஏற்று நடித்த "செல்லம்மா" என்ற கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.

    தற்போது ராம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பேரன்பு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் பேபி சாதனா இளவரசி டயானா விருது வாங்கியுள்ளார் சாதனா.

    சமூக மேம்பாடு

    சமூக மேம்பாடு

    பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாக 1999 ஆம் ஆண்டிலிருந்து இளவரசி டயானா விருது வழங்கப்படுகிறது. சமூக மேம்பாட்டிற்காக முயற்சி எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஒன்பது வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்கள் குறைந்தது ஒரு வருட காலம், சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தால் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

    வழிகாட்டி

    வழிகாட்டி

    தற்போது துபாயில் வசித்து வரும் சாதனா அவருடைய பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு சமூக சேவைகளிலும், சமூக மேம்பாட்டிற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த விருதுகுறித்து பேசிய சாதனா, சிறுவயதில் உலக அளவில் ஒரு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ராம் அங்கிள் தான் என்கிறார்.

    பேரன்பு

    பேரன்பு

    2016ஆம் ஆண்டு பேரன்பு திரைப்படத்தில் சாதனா ஒப்பந்தம் ஆனபோதே, பல மாற்றுத் திறனாளி குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது "உனக்கு தெரிந்த விஷயங்களை இதுபோன்ற குழந்தைகளுக்கு சொல்லிக்கொடு, அவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்து" என இயக்குனர் ராம் அறிவுறுத்தியுள்ளார். ராம் தனக்கு மற்றொரு அப்பா என பேரன்போடு அழைக்கும் சாதனா அவரின் வார்த்தைகளை பின்பற்றி ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுடைய பல குழந்தைகளுக்கு பயிற்சியளித்துள்ளார்.

    ஸ்பீச் தெரப்பி

    ஸ்பீச் தெரப்பி

    இதுபோன்ற குறைபாடுடைய குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல இயல்பு வாழ்க்கை வாழ உதவும், வகையில் அவர்களுக்கு ஸ்பீச் தெரப்பி, நடனம், குறைகளை மறந்து நிறைகளைக் கொண்டாடும் மனப்பக்குவம் போன்ற பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். இவரின் சமூக அக்கறையைக் கவனித்த பள்ளி நிர்வாகத்தினர், சாதனாவை ஊக்குவிக்கும் விதமாக இங்கிலாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் "இளவரசி டயானா" விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

    விருது

    விருது

    இந்த இளவரசி டயானா விருது என்பது ஆன்லைனில் வாக்களித்து போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விருது கிடையாது. ஒருவர் எத்தனை மாதங்கள் தொடர்ச்சியாக இதுபோல் பயிற்சியளிக்கிறார் என்பதைக் கண்காணித்து, பயிற்சி பெற்ற குழந்தைகளிடன் நேர்க்காணல் செய்து அவர்களின் திறன் மேம்பாட்டை பரிசோதித்த பின்னரே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து விருதுபெறும் சிலரில் தமிழகத்தைச் சேர்ந்த சாதனாவும் இருப்பது மிகப்பெரிய பெருமை.

    சாதனா

    சாதனா

    இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் என்னைவிட மிகச் சிறப்பாக சமூக சேவையாற்றும் இளைஞர்கள் நாடெங்கிலும் உள்ளனர். நான் துபாயில் படிப்பதனால் என்னை ஊக்குவிக்கும் முயற்சியில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். எனக்கு விருது வாங்குவது இது முதல்முறை கிடையாது. ஆனால் என்னைவிட சிறப்பாக சேவையற்றும் பலருக்கு இதுபோன்ற விஷயங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லை. அதனால் மற்ற பள்ளிக்குழந்தைகளுக்கும் உலக அளவினா அங்கீகாரம் கிடைக்க விருதுக்கான வலைதளப் பக்கத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    https://diana-award.org.uk/award/nomination-centre/

    ஜூலை மாதமே இவ்விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றுள்ளது. சாதனாவால் கலந்துகொள்ள முடியாததால் தற்போது வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

    English summary
    Actress Baby Sadhana praised for her noble cause. She got Princes Diana award.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X