பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல குழந்தை நட்சத்திரம்.. அதுவும் என்ன ரோலில் தெரியுமா?
சென்னை: வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவுப் படமான பொன்னியின் செல்வன் உருவாகி வருகிறது.
சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தாய்லாந்தில் ஷூட்டிங்
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே எடுக்க முயன்று முடியாமல் போன அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை படமாக்க மணிரத்னம் முயற்சித்து வருகிறார். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் தாய்லாந்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஷூட்டிங் நிறுத்தம்
இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல், இந்த பிரம்மாண்ட கனவு படத்தை இயக்கி விடலாம் என்ற முனைப்புடன் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ஷூட்டிங் கிளம்பிய இயக்குநர் மணிரத்னத்துக்கும், இந்த கொரோனா வைரஸ் பெரும் தொல்லையாக அமைந்துள்ளது. லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் அப்படியே நிற்கிறது.

டிராப் என வதந்தி
இந்தியன் 2, மாநாடு உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் டிராப் என வதந்தி பரவியது போல, பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்துக்கும் அந்த வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்காக நடிகர்கள் ஒதுக்கிய கால்ஷீட் எல்லாம் காலாவதி ஆகும் நிலையில், மீண்டும் எப்படி அத்தனை நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து படத்தை உருவாக்குவார் மணிரத்னம் என்ற பேச்சுக்களும் கோலிவுட்டில் அடிபட்டு வருகின்றன.

தெய்வத்திருமகள்
ஆனால், மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இந்த படத்தை உருவாக்குவதில், உறுதியாக இருக்கின்றனர். நடிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது, இந்த படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு தெய்வத் திருமகள், சைவம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான பேபி சாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

என்ன ரோல்
பேபி சாரா தற்போது இளம் வயது பெண்ணாக மாறி உள்ளார். இந்த படத்தின் லீடு ஹீரோயினின் இளம் வயது தோற்றத்தில் அவர் நடிக்க உள்ளார். ஐஸ்வர்யா ராய் நடிக்கும் நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் தான் பேபி சாரா நடிப்பார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Recommended Video

பொன்னியின் செல்வன்
மேலும், இந்த படத்தின் நாயகன் பொன்னியின் செல்வனாக நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இளம் வயது பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் அவரது மகன் ஆரவ் நடிக்க முன்னதாக ஒப்பந்தம் ஆனதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், சில பிரபல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











