தேசிய விருதுகள்-அமிதாப், ராமா நாயுடு, பசங்க நடிகர்கள் பெற்றனர்-இளையாராஜா ஆப்சென்ட்

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இசைஞானி இளையராஜா மட்டும் நேற்றைய விழாவுக்கு வரவில்லை. மற்ற அனைவரும் நேரில் வந்து பெற்றுக் கொண்டனர்.
டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அனைவரும் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
பழம் பெறும் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு தாதா சாஹேப் பால்கே விருதினைப் பெற்றார்.
பா படத்திற்காக அமிதாப் பச்சன் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். நிகழ்ச்சிக்கு அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் வந்திருந்தனர். இது அமிதாப்புக்கு 4வது தேசிய விருதாகும்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பசங்க படத்தின் ஹீரோக்களான ஸ்ரீதரும், கிஷோரும் பெற்றுக் கொண்டனர்.
More from Filmibeat
amitabh bachchan அமிதாப் பச்சன் இளையராஜா தேசிய திரைப்பட விருதுகள் பசங்க படம் ilayaraja national film awards pasanga movie


Click it and Unblock the Notifications











