GV Prakash kumar: மீண்டும் இணையும் பேச்சுலர் கூட்டணி.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படம்!
சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷ் -திவ்யபாரதி கூட்டணியில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான பேச்சுலர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவந்த நிலையில், தற்போது தன்னுடைய 25வது படத்தில் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்தப் படத்தை ஜிவி பிரகாஷே தயாரித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தில் ஜோடியாகும் திவ்யபாரதி: இசையமைப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கமிட்டாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகராக தன்னுடைய 25வது படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கமல் பிரசாத் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக காதலிக்க யாருமில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.
இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகியுள்ளார். முன்னதாக இந்த ஜோடி கடந்த 2021ம் ஆண்டில் வெளியான பேச்சுலர் படத்தில் இணைந்து நடித்திருந்தது. இந்தப் படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது. இந்தப் படம் நடிகராக ஜிவி பிரகாஷின் 25வது படமாக அமைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது.
படம் மிக பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பட்ஜெட்டிற்காக 20 கோடி ரூபாயை ஜிவி பிரகாஷ் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டார்லிங் படத்தின்மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், 8 ஆண்டுகளிலேயே தன்னுடைய 25வது படத்தை எட்டியுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவுள்ளதும் படத்திற்கான கூடுதல் அட்ராக்ஷனாக பார்க்கப்படுகிறது.
பேச்சுலர் படம் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய திவ்யபாரதி, அதிகமான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். முதல் படமான பேச்சுலர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது மீண்டும் தன்னுடைய என்ட்ரி பட ஹீரோவான ஜிவி பிரகாஷுடன் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் மதயானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்திருந்தார் ஜிவி பிரகாஷ். இன்னிலையில் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நடிகராக இந்தப் படத்தில் நடித்துவரும் ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராகவும் பல படங்களை தன்வசம் வைத்துள்ளார். கேப்டன் மில்லர், ஜப்பான், சூரரைப் போற்று இந்தி ரிமேக், லக்கி பாஸ்கர், டைகர் நாகேஸ்வரராவ் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இதில் கேப்டன் மில்லர், ஜப்பான் படங்கள் அடுத்ததாக கோலிவுட்டில் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இந்தப் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











