கதிருக்கு ஜோடியாக நடிக்கும் பேச்சுலர் பட கதாநாயகி... படப்பிடிப்பு முடிந்தது!

சென்னை: பரியேறும் பெருமாள் போன்ற தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கதிர்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி

இப்பொழுது கதிர் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

காதல் என்ற பெயரில் அத்துமீறிய

காதல் என்ற பெயரில் அத்துமீறிய

இசை அமைப்பாளராக இருந்து இப்பொழுது தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார் . ஹீரோவாக தொடர்ந்து கை நிறைய படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பேச்சுலர். அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது உள்ள இளைஞர்கள் காதல் என்ற பெயரில் அத்துமீறிய பிறகு ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி மிக எதார்த்தமாக கூறிய இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

இஷ்க்

இஷ்க்

முதல் படத்திலேயே நெருக்கமான காட்சிகளில் கவர்ச்சியில் கலக்கிய திவ்யபாரதி இப்பொழுது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் இஷ்க். ஷான் நிகம், அனு ஷீட்டல் மற்றும் சைன் டாம் சைக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் மலையாள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இத்திரைப்படம் மலையாளத்தில் ஹிட்டடித்தது.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

இந்த படம் பின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. பிரியா வாரியார் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தெலுங்கு ரீமேக்கில் கோட்டையை விட்டு படுதோல்வியை சந்தித்தது . இந்த நிலையில் இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை 'ஜீரோ' படத்தை இயக்கிய சிவ் மோகா இயக்கி வர கதிர் ஹீரோவாக நடித்து உள்ளார்.

கதிருக்கு ஜோடியாக திவ்யபாரதி

கதிருக்கு ஜோடியாக திவ்யபாரதி

பரியேறும் பெருமாள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய இளம் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள கதிர் அடுத்தடுத்த பல கதைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இஷ்க் தமிழ் ரீமேக்கில் கதிருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்து வருகிறார். பேச்சுலர் படத்தில் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த திவ்யபாரதிக்கு இப்பொழுது தமிழில் மிகப் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X