ஜிவி பிரகாஷின் பேச்சிலர் படம்... தியேட்டரில்தான் ரிலீசாகும்... படக்குழு திட்டவட்டம்
சென்னை : ஜிவி பிரகாஷ்குமாரின் பேச்சிலர் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
பேச்சிலர் படத்தின் நாயகனாக மட்டுமின்றி இசையையும் அமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
இந்நிலையில் படம் லாக்டவுனுக்கு பிறகு தியேட்டர்களில்தான் ரிலீசாகும் என்று படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இளைஞர்களுக்கான படமா?
ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி, முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பேச்சிலர். ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டைட்டிலை பார்த்தால் இளைஞர்களுக்கான படமாக தெரிகிறது.

இளைஞனின் கதை
ஆனால் இந்த படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கோவையில் இருந்து பெங்களூரு ஐடி கம்பெனியில் வேலை செய்ய வரும் இளைஞரின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்தால் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் இசையமைப்பு
படத்தின் நாயகனாக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் படம் லாக்டவுனை அடுத்து தியேட்டர்கள் திறந்தவுடன் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. லாக்டவுன் ரிலீஸ் செய்யப்படுவதற்காக படக்குழு காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ்
தமிழ் திரைப்படங்களில் பல படங்களில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு, ஆனால் நீண்ட காத்திருப்புக்கு பின்பு ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான சமீபத்திய உதாரணம் ஜகமே தந்திரம். இதுகுறித்து அந்த படத்தின் நாயகன் தனுஷூம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பேச்சிலர் தயாரிப்பு தரப்பு விளக்கம்
இந்நிலையில் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பு மற்றும் இசையில் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கும் பேச்சிலர் படத்தை திரையரங்கில்தான் வெளியிடுவோம் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. தொடர்ந்து இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.


Click it and Unblock the Notifications











