5 மில்லியன் வியூசை கடந்த பேச்சிலர் படத்தின் டீசர்... ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி
சென்னை : ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் இசையில் உருவாகியுள்ள படம் பேச்சிலர்.
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் டீசர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியானது.
தற்போது இந்த டீசர் 5 மில்லியன் வியூக்களை யூடியூப்பில் கடந்துள்ளது. இதுகுறித்து ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பேச்சிலர் படம்
நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பு மற்றும் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் பேச்சிலர். சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ஹீரோயினாக திவ்யபாரதி நடித்துள்ளார்.

இளைஞனின் வாழ்க்கை
முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவையிலிருந்து பெங்களூரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடும்போது நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளியான டீசர்
கடந்த பிப்ரவரியில் காதலர் தினத்தையொட்டி இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது படத்தின் டீசர் 5 மில்லியன் வியூக்களை தாண்டியுள்ளது. இந்த தருணத்தை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்டில்கள் வெளியீடு
ஜிவி பிரகாஷூம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பேச்சிலர் படத்தின் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது டீசர் 5 மில்லியன் வியூக்களை தாண்டி சாதித்துள்ளது.


Click it and Unblock the Notifications











