சூட்டிங் முடிஞ்சுது... வர்ற வாரங்கள்ல அடுத்தடுத்த அப்டேட்... வலிமை படம் குறித்து வினோத் அறிவிப்பு

சென்னை : அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் இணைந்துள்ள படம் இது.

இந்த படத்தின் ஒருசில காட்சிகள் மீதமுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக வினோத் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் வாரங்களில் வலிமை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் காத்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

2வது முறை இணைந்த கூட்டணி

2வது முறை இணைந்த கூட்டணி

அஜித் -எச் வினோத் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. இருவரும் முதலில் இணைந்த படம் நேர்கொண்ட பார்வை. படத்தை பாலிவுட் இயக்குநர் போனிகபூர் தயாரித்திருந்தார். பாலிவுட்டின் பிங்க் படத்தை ரீமேக் செய்து இந்த படம் வெளியானது. பாலிவுட்டில் அஜித்தின் கேரக்டரில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.

தள்ளிப் போன சூட்டிங்

தள்ளிப் போன சூட்டிங்

இந்நிலையில் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக தற்போது வலிமை படத்தில் இணைந்துள்ளது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போன நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக படத்தின் டைக்ரடர் எச் வினோத் தெரிவித்துள்ளார்.

வினோத் அறிவிப்பு

வினோத் அறிவிப்பு

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை ரெடியாக உள்ளதாகவும் படத்தின் ரிலீஸ் டேட் உள்ளிட்டவையும் அடுத்தடுத்து வரும் வாரங்களில் வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

அஜித்குமாருடன் ஹுமா குரோஷி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டும் இல்லாத நிலையில் எச் வினோத்தின் இந்த அறிவிப்பு கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான செய்தியாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X