அன்புச்செழியனை 'தே...' வார்த்தையால் திட்டியது ஏன்?: நடிகை பூர்ணா விளக்கம்
Recommended Video

சென்னை: பைனான்ஸியர் அன்புச்செழியனை கெட்ட வார்த்தையால் திட்டியது குறித்து நடிகை பூர்ணா விளக்கம் அளித்துள்ளார்.
தனது மரணத்திற்கு பைனான்ஸியர் அன்புச்செழியன் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தலைமறைவான அன்புச்செழியன் இதுவரை போலீஸ் கையில் சிக்கவில்லை.

கெட்ட வார்த்தை
பைனான்ஸியர் அன்புச்செழியனை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டிருந்தார் நடிகை பூர்ணா. கமெண்ட்டிலும் கெட்ட வார்த்தை பயன்படுத்தியிருந்தார் அவர்.

ட்வீட்
எனக்கு அன்புச்செழியனை தனிப்பட்ட முறையில் தெரியாது. அசோக் குமாரின் திடீர் மரணம் என்னை பாதித்துவிட்டது. நானும் அசோக் குமாரும் சேர்ந்து பணியாற்றியுள்ளோம் என்கிறார் பூர்ணா.

அசோக்
நான் அசோக் குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது குடும்ப உறுப்பினர்களை பார்த்து கவலை அடைந்தேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்று பூர்ணா தெரிவித்துள்ளார்.

கடிதம்
நான் அன்புச்செழியனிடம் பேசியது இல்லை. நான் கேட்டது மற்றும் அசோக் குமாரின் கடிதத்தில் அன்புவின் பெயர் இருந்ததை வைத்து நான் கோபப்பட்டேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் கோபத்தின் வெளிப்பாடே தவிர சர்ச்சை ஏற்படுத்த கூறியது அல்ல என்கிறார் பூர்ணா.


Click it and Unblock the Notifications











