மேடையில் அக்ஷய் குமார் செய்த வேலை.. நகரக்கூட முடியாமல் பரிதவித்த நடிகை!

மும்பை: படே மியான் சோட்டே மியான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் அக்ஷய் குமார் செய்த செயலால் நடிகை ஆலியா தர்மசங்கடத்திற்கு உள்ளானார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஏப்ரல் 10ந் தேதி வெளியாக உள்ள இத்திரைப்பத்தில் அக்ஷய் குமார், பிரித்விராஜ், டைகர் ஷெராப், சோனாக்கி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், 1991ம் ஆண்டு சௌகான் திரைப்படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மை கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து மாஸ் ஹீரோ என பெயர் எடுத்தார். பாலிவுட் நடிகரான இவர், அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை கதாபாத்திரம் என நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படத்தில் பக்ஷிராஜாவா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Bade Miyan Chote Miyan actress Alaya suffered trailer launch event

ஓஎம்ஜி 2: அக்‌ஷய் குமாரின் நடிப்பில் கடைசியாக ஓஎம்ஜி 2 படம் வெளியானது. பாலியல் கல்வி தொடர்பான இந்தப் படத்தில் இந்து கடவுள்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி இந்த படத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தை திரையிடக்கூடாது என கூறி தியேட்டரில் அக்‌ஷய் குமாரின் உருவ பொம்மையை எரித்தனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை பெற்றது.

படே மியான் சோட்டே மியான்: தற்போது இந்தியில் அக்‌ஷய் குமார், டைகர் ஷெரோஃப் இணைந்து நடித்திருக்கும் படம் படே மியான் சோட்டே மியான், இப்படத்தை சுல்தான், டைகர் ஸிந்தா ஹை உள்ளிட்ட படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

நகரமுடியாமல் இருந்த நடிகை: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆல்யா நீளமான ஆடை அணிந்து வந்திருந்தார். அந்த ஆடை மேடையில் அப்படியே சரிந்து கிடந்தது. அப்போது மேடைக்கு வந்த அக்ஷய் குமார், நடிகையின் ஆடையை கவனிக்காமல் மித்தபடி பேசிக்கொண்டே இருந்தார். இதனால், தர்ம சங்கடத்திற்கு உள்ளான நடிகை ஆல்யா அந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் நின்று கொண்டே இருந்தார். இது தெரியாத ஆக்ஷய் குமார், பிரித்விராஜின் ஆடுஜீவிதம் படத்திற்காக 16 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இருக்கிறார். அவரிடம் இருந்து, விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக அக்ஷய் குமார் படம் குறித்து நெகிழ்ந்து பேசினார். அக்ஷய் குமார் பேசி முடிக்கும் வரை நகராமல் அங்கே இருந்த நடிகை அவர் பேசி முடித்தப்பிறகு தான் அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X