ரஜினி- சிம்பு, கமல்- துல்கர்.. ஹீரோயின் ஸ்ருதி.. அந்த கிளாசிக் பட ரீமேக் ஐடியாவில் இயக்குனர்!

By

சென்னை: ரஜினி, கமல் நடித்து இன்று வரை பேசப்பட்டும் அந்த கிளாசிக் படத்தை ரீமேக் செய்ய பிரபல இயக்குனர் முடிவு செய்துள்ளார்.

Recommended Video

Andrea Jeremiah romantic Lip Lock goes Viral • Aval, master, Broken Angel

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஶ்ரீப்ரியா நடித்து, 1978 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம், 'அவள் அப்படித்தான்'.

ருத்ரய்யா இயக்கி இருந்த இந்தப் படம் வணிக ரீதியாகத் தோல்வி அடைந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

வண்ணநிலவன்

வண்ணநிலவன்

இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு ருத்ரய்யாவுடன் இணைந்து சோமசுந்தரேஸ்வர், எழுத்தாளர் வண்ணநிலவன் ஆகியோர் திரைக்கதை வசனம் எழுதி இருந்தனர். சிவச்சந்திரன், சரிதா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம், இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த காலகட்டத்திலேயே அதிகமான ஆங்கில வசனங்களுடன் வெளியான படம் இது.

இப்போதும் வரவேற்பு

இப்போதும் வரவேற்பு

இந்தப் படத்துக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்போதும் வரவேற்பு இருக்கிறது. இது ரீமேக் காலகட்டம். அதனால் இந்தப் படத்தையும் ரீமேக் பண்ணலாம் என சில இயக்குனர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. எந்த மொழிக்கும் காலத்துக்கும் பொருத்தமான படமான இதை, இப்போது இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், ரீமேக் செய்ய ஆர்வமாக இருக்கிறது.

அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்

இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், அதர்வா, பிரசன்னா, சமந்தா நடித்த பாணா காத்தாடி, அதர்வா, அனைகா நடித்த செம போத ஆகாதே படங்களை இயக்கியவர். இப்போது ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணணும் என்ற படத்தை இயக்கியுள்ளார். அவர், அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் பண்ண திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

இந்தப் படத்தில் கமல்ஹாசன் வேடத்தில் துல்கர் சல்மான், அல்லது விஜய்தேவரகொண்டா, ரஜினி வேடத்தில் சிம்பு, ஶ்ரீப்ரியா வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதன் ரீமேக் உரிமை யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறியுள்ள பத்ரி வெங்கடேஷ், இயக்குனர் ருத்ரய்யாவின் மகள் அமெரிக்காவில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X