பிரபுதேவா பத்து கெட்டபில் அசத்தும் பஹிரா… சூப்பர் அப்டேட் வெளியிட்ட படக்குழு!

சென்னை : பஹிரா படத்தின் முதல் பாடலான சைக்கோ ராஜா பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படத்தின் பாடலுக்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அமைரா தாஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி,காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்

10 கெட்டப்

10 கெட்டப்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பஹிரா. இத்திரைப்படத்தின் டீசர்

ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கிறார்.

சைக்கோவாக

சைக்கோவாக

பெண்களையும் கொல்லும் சைக்கோ வேடத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார். குறிப்பாக டீஸரின் இறுதியில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே என்று வசனம் பேசி கொலை செய்யும் காட்சி திகிலூட்டும் வகையில் உள்ளது.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அபிநந்தன், இசையமைப்பாளராக கணேசன் சேகர், எடிட்டராக ரூபன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே 50% படப்பிடிப்பை முடித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அதன் பிறகு கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நின்றுபோனது.

மே6ந் தேதி ரிலீஸ்

இப்படத்தின் முதல் பாடலான சைக்கோ ராஜா வரும் மே 6ந் தேதி வெளியாக உள்ளது. இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். இதன் அறிவிப்பு கொண்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X