'பஹிரா' படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்!

சென்னை : த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கு படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரபுதேவாவின் 50வது திரைப்படம் பொன்மாணிக்கவேல் ரிலீஸுக்கு தயாராகி தாமதமாகி வரும் நிலையில் இப்பொழுது பஹிரா படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.

5 கதாநாயகிகள் நடிக்க சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வந்த பஹிரா படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ள செய்தியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுமாரான வெற்றியை

சுமாரான வெற்றியை

நடன இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகரமான நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வந்த பிரபுதேவா இப்போது பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் போக்கிரி திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பிரபு தேவா அதை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து வில்லு திரைப்படத்தை இயக்க அந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

போலீஸ் அதிகாரியாக

போலீஸ் அதிகாரியாக

குலேபகாவலி, தேவி உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு அடுத்தடுத்த வெற்றியை கொடுத்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் முழு வீச்சில் கதாநாயகனாக மட்டும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் பிரபுதேவா தனது 50வது திரைப்படம் பொன் மாணிக்கவேல் ரிலீஸ் ஆக தாமதமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபுதேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம் இதுவேயாகும்.

பஹிரா

பஹிரா

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மிஸ்டரி சைக்கோ த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கி வர அதற்கு பஹிரா என தலைப்பிடப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த திரைப்படத்தில் அனேகன் படத்தில் நடித்த நடிகை அமிரா தஸ்தூர் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் காயத்ரி உள்ளிட்டோர் முதன்மை கதாநாயகியாக நடிக்க மேலும் 3 புதுமுக நடிகைகள் இதில் நடித்துள்ளனர் மொத்தம் 5 கதாநாயகிகள் இந்த படத்தில்.

 குழு புகைப்படம்

குழு புகைப்படம்

மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு இப்பொழுது அதன் படப்பிடிப்பை முடித்த கையோடு படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படப்பிடிப்பு முடிந்ததை சந்தோசமாக கேக் வெட்டி கொண்டாடியிருக்க பஹிரா திரைப்படம் வரும் சம்மர் சீசனில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X