Bagheera Review: ஆளவிடுங்கடா சாமி.. பிரபு தேவாவின் சைக்கோ த்ரில்லர் பஹீரா எப்படி இருக்கு?
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா, அமைரா தஸ்தூர், காயத்ரி, ஜனனி அய்யர், ரம்யா நம்பீசன், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள பஹீரா திரைப்படம் ஒருவழியாக இன்று வெளியானது.
2018ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ரொம்பவே குறைவாக உள்ளது.
சரி, பிரபுதேவா பல கெட்டப்புகளில் ஹீரோயின்களை பழி வாங்கும் படம் எப்படி இருக்கு என தியேட்டரில் சென்று பார்த்த ரசிகர்கள், தற்போது ட்விட்டரில் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

பிரபு தேவாவின் பஹீரா
பஹீரா படத்திற்காக மொட்டை அடித்து பிரபு தேவா மிரட்டல் லுக்கில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் தனது ஒட்டுமொத்த சைக்கோத்தனமான நடிப்பையும் கொட்டித் தீர்த்து இருக்கிறார் பிரபு தேவா. தொடர்ந்து பிரபு தேவா இன்னமும் ஹீரோவாக நடித்து வந்தாலும், அவரது படங்கள் முன்பை போல ரசிகர்களை பெரிதாக கவர்வது இல்லை.

பக்கா என்டர்டெயின்மென்ட் ஃபார் பாய்ஸ்
திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் பக்கா என்டர்டெயின்மென்ட் ஃபார் பாய்ஸ் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சைக்கோ கொலைகாரனாக மாறி பெண்களை வேட்டையாடுவது போல இந்த படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

ரொம்ப ஆவரேஜ்
பிரபுதேவா நடித்துள்ள பஹீரா திரைப்படம் சில இடங்களில் வொர்க்கவுட் ஆகியிருக்கு, ஆனால், தேவையில்லாமல் ஏன் அத்தனை பாடல்கள் இடையே வந்து படத்தை கெடுக்கிறது என்பது தான் தெரியவில்லை. பிரபுதேவா இந்த படத்திலும் மெனக்கெட்டு நடித்துள்ளார். ரொம்ப எதிர்பார்த்த அளவுக்கு படமில்லை. ஆவரேஜ் படம் தான் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

யூத் ஆடியன்ஸுக்காக
பஹீரா திரைப்படம் டீசன்ட்டாக உள்ளது. ரொம்ப மோசமான காட்சிகள் எல்லாம் படத்தில் இல்லை. அதிகமாகவே ட்ரிம் செய்துள்ளது அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. சில இடங்களில் வரும் வசனங்கள் ஆபாசமாக உள்ளது. பிரபுதேவாவின் நடிப்பு பிரமாதம். மொத்தத்தில் இந்த படம் யூத் ஆடியன்ஸுக்கான படமாகவே உள்ளது என இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
பஹீரா டே
இந்த படத்தை பார்க்க பல ஆண்டுகளாக வெயிட் பண்ணிட்டு இருந்த நிலையில், கடைசியில் சைக்கோ ராஜாவாக பிரபு தேவா மிரட்டி உள்ள பஹீரா வெளியாகி உள்ளது. தியேட்டரில் பார்த்து ரசிக்கப் போகிறேன். இது பஹீரா டே என பிரபு தேவாவின்பஹீரா படத்தின் அட்டகாசமான காட்சிகளையே இந்த ரசிகர் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











