கார்த்தியுடன் கைகோர்க்கும் திரைக்கதை மன்னன் பாக்யராஜ்!

By Shankar

சென்னை: திரைக்கதை மன்னன் என பாலிவுட்டே கொண்டாடும் கே பாக்யராஜ், ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்கிறார்.

வெள்ளிவிழா இயக்குநர்...

வெள்ளிவிழா இயக்குநர்...

வரிசையா 9 சில்வர் ஜூப்ளி படம் தந்த ஒரே இயக்குநர் என்ற பெருமைக்குரியவர் கே பாக்யராஜ். தமிழ் சினிமா இயக்குநர்களில் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு திகழ்ந்தவர். இவரது 80 சதவீத படங்கள் பெரும் வசூல் சாதனை புரிந்தவை.

வரிசையாக வெற்றிகள்...

வரிசையாக வெற்றிகள்...

சுவரில்லாத சித்திரங்கள் தொடங்கி, மவுன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், இது நம்ம ஆளு, வீட்ல விசேஷங்க... இப்படி ஏகப்பட்ட ஹிட் படங்கள்.

சறுக்க வைத்த வேட்டி...

சறுக்க வைத்த வேட்டி...

வேட்டி மடிச்சுக்கட்டு படம் அவருக்கு பெரும் சறுக்கலாக அமைந்தது. அந்தப் படத்துக்குப் பிறகு அவர் படங்கள் இயக்குவதையும் குறைத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் தனது அரசியல் நிலைப்பாடு, சொந்தக் கட்சி காரணமாக பொருளாதார ரீதியாக பல சிரமங்களையும் அனுபவித்தார்.

விஜயகாந்துடன்...

விஜயகாந்துடன்...

இவற்றிலிருந்து ஒரு கட்டத்தில் மெல்ல மீண்டு வந்தார் பாக்யராஜ். அதுவரை தன் படங்களில் தானே ஹீரோவாக நடித்து வந்த அவர், சொக்கத் தங்கம் படத்தில் விஜயகாந்தை ஹீரோவாக வைத்து இயக்கினார். விஜயகாந்துக்கு சிறந்த படமாக அமைந்தது.

பாரிஜாதம்...

பாரிஜாதம்...

இந்தப் படத்துக்குப் பிறகு பாக்யராஜ் இயக்கிய படம் பாரிஜாதம். அவரது மகள் சரண்யாவை இதில் நாயகியாக்கியிருந்தார். ரஜினி தன் கையால் இசை வெளியீடு செய்து வாழ்த்தினார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், டீஸன்டான வசூலைத் தந்தது.

சாந்தனு சொதப்பிய சித்து

சாந்தனு சொதப்பிய சித்து

அடுத்து தன் மகன் சாந்தனுவை நாயகனாக வைத்து சித்து ப்ளஸ் டூ படத்தை இயக்கினார். பாக்யராஜ் இயக்கிய படங்களிலேயே மோசமான படம் என்ற பெயரை சித்து ப்ளஸ் டூ பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அவர் மகன் சாந்தனுதான்.

மீண்டும் காமெடி...

மீண்டும் காமெடி...

மகள், மகன் என பாசத்தில் கட்டுண்டு, தன்னுடைய ட்ச்சை இழந்துவிட்ட பாக்யராஜ், இப்போது அதிலிருந்து விடுபட்டு, தன் பாணியில் ஒரு முழு நீள காமெடிப் படத்தைத் தரவிருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X