தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்யுங்கள் எம்எல்ஏக்களே! - பாக்யராஜ்
சென்னை: சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதி மக்களின் கருத்தைக் கேட்ட பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் கே பாக்யராஜ் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அபிமானியும், எனது கலையுலக வாரிசு என எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்டவருமான கே பாக்யராஜ் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், "எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஒரு ஆள் 'சீட்' (எம்.எல்.ஏ.) வாங்கி கொடுக்கிறாங்க? அல்லது ஒரு குடும்பம் சீட் வாங்கி தருகிறது என்று சொன்னால் அந்த குடும்பத்துக்கு கடைசிவரை விசுவாசமாக இருக்கணும் என்று நினைக்கிறார்கள் என்றால் தப்பே இல்லை.
ஆனால் அதே நேரத்தில் ஓட்டு போட்ட எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது. அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம் னே. எனவே ஆங்காங்கே ஒளிந்து கொண்டு, மறைந்து கொண்டு நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்வதை விட்டு விடுங்கள்.
தொகுதிக்குச் சென்று மக்கள் கருத்தைக் கேட்டு அதன்படி முடிவு எடுங்கள்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











