twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டல்லாஸில் இன்று பாக்யராஜ் தலைமையில் பட்டிமன்றம்

    By Shankar
    |

    டல்லாஸ் (யு.எஸ்): இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் டல்லாஸில் இன்று பட்டி மன்றம் நடைபெறுகிறது.

    இயக்குனர் பாண்டியராஜன், வழக்கறிஞர் சுமதி மற்றும் டல்லாஸ் தமிழர்கள் இதில் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

    முதன் முறையாக அமெரிக்காவில்

    முதன் முறையாக அமெரிக்காவில்

    கல்யாண மாலை நிகழ்ச்சி முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நியூயார்க், நியூஜெர்ஸி, கனெக்டிக்கட் , சான் ஓசே, டல்லாஸ் மற்றும் ஹூஸ்டன் நகரில் தமிழ்ச் சங்கங்களில் ஆதரவுடன் நடக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் பட்டிமன்றம் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியூ ஜெர்ஸி, நியூயார்க், கனெக்டிக்கட் நகரங்களில் சாலமன் பாபையா, ராஜா, பாரதி பாஸ்கர் அணியினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.

    பாக்யராஜ் – பாண்டியராஜன்

    பாக்யராஜ் – பாண்டியராஜன்

    சான் ஓசே, டல்லாஸ், ஹூஸ்டன் நகரங்களில் இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் பாண்டியராஜன், வழக்கறிஞர் சுமதி பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. காதலை முதலில் வெளிப்படுத்தி அதில் உறுதியாக இருப்பது ஆண்களா? அல்லது பெண்களா ? என்ற தலைப்பில் நேற்று சான் ஓசே வில் பட்டிமன்றம் நடந்தது.

    திரைப்படங்களும் குடும்பங்களும்

    திரைப்படங்களும் குடும்பங்களும்

    இன்று டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் 'திரைப்படங்கள் அருமையான குடும்ப உறவுகளை பலப்படுத்துகிறதா, பலவீனப்படுத்துகிறதா' என்ற தலைப்பில் பேச உள்ளனர்.

    ஹூஸ்டனில்...

    ஹூஸ்டனில்...

    நாளை ஹூஸ்டனில் நடைபெறும் நிகழ்ச்சி ‘முந்தானை முடிச்சு வாழ்க்கையை சுகமாக்குகிறதா? சுமையாக்குகிறதா' என்ற தலைப்பில் இடம்பெறுகிறது. அனைத்து தலைப்புக்களுமே இயக்குனர் பாக்யராஜுக்கு பிடித்தமானவை, அவருடைய திரைப்படங்களுக்கு தொடர்புள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கத் தமிழர்களின் தமிழார்வம்

    அமெரிக்கத் தமிழர்களின் தமிழார்வம்

    கல்யாண மாலை நிகழ்ச்சியின் இயக்குனர் மீரா நாகராஜன் கூறுகையில், 'அமெரிக்கத் தமிழர்களின் தமிழ்ப்பற்று, விருந்தோம்பல் தங்களை திக்குமுக்காடச் செய்கிறது' என்றார். எல்லா ஊர்களிலும் ஏராளமானோர் நேரடித் தேர்வுக்கு வந்திருந்தனர். அனைவருமே சிறந்த பேச்சாற்றால் மிக்கவர்களாகவும், தமிழகத்தின் மீதான பாசம், ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஏராளமானோர் பங்கேற்றதால், பேச்சாளார்களை தேர்வு செய்வது சவாலாக இருந்தது. அடுத்த தலைமுறைக்கு தமிழை இவர்கள் எடுத்துச் செல்லும் பாங்கு வியப்பளிக்கிறது,' என்றார்.

    இயக்குனர் பாக்யராஜ், அவரது சிஷ்யர் இயக்குனர் பாண்டியராஜனின் அமெரிக்க சுற்றுப் பயணம், அங்குள்ள தமிழர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    English summary
    Director Bagyaraj's live Pattimandram (talk show) will be held at Dallas today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X