ஒரேநாளில் 2 மில்லியன் பார்வைகளை எட்டிய பஹீரா ட்ரெயிலர்... பிரபுதேவா ஹாப்பி!

சென்னை : நடிகர் பிரபுதேவா மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் பஹீரா.

இந்தப் படத்தின் ட்ரெயிலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் ஒரே நாளில் 2 மில்லியன் வியூக்களை எட்டியுள்ளது.

பாலிவுட்டில் பிரபுதேவா

பாலிவுட்டில் பிரபுதேவா

தன்னுடைய நடனத்தின்மூலம் ஆரம்பத்தில் பிரபலமானவர் பிரபுதேவா. அதைக்கொண்டு கதாநாயகனாகவும் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் பாலிவுட்டுக்கும் சென்று சிறப்பான நடனத்தையும் தொடர்ந்து சில படங்களையும் இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். சில காலம் கோலிவுட்டில் இருந்து விலகியிருந்த அவர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்.

பிரபுதேவாவின் பஹீரா படம்

பிரபுதேவாவின் பஹீரா படம்

பிரபுதேவாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் பஹீரா. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் சிறப்பான கவனத்தை பெற்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

வரவேற்பை பெற்ற டீசர்

வரவேற்பை பெற்ற டீசர்

சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் டீசர் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியானது. கமர்சியல் ஹீரோவாக வலம்வந்த பிரபுதேவாவின் மாறுபட்ட கோணத்தை இந்தப் படத்தில் காண முடிகிறது.

சைக்கோ த்ரில்லர் படம்

சைக்கோ த்ரில்லர் படம்

சைகோ த்ரில்லர் படமாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் சைக்கோ கொலைகாரனாக பிரபுதேவா மிரட்டியுள்ளார். அவருடன் ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரதன் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் மகிழ்ச்சி

ஆதிக் ரவிச்சந்திரன் மகிழ்ச்சி

படத்தின் அமைராவும் இடம் பெற்றுள்ளார். அவர் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் படம் சிறப்பாக அமைய பிரபு மாஸ்டர் முக்கிய காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான படம் எடுக்க ஆர்வம்

வித்தியாசமான படம் எடுக்க ஆர்வம்

அவர் தன்னை முழுமையாக நம்பி நடித்துக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். பெண் வேடம் போட வேண்டும் என்று கூறியவுடன் உடனடியாக எந்த தயக்கமும் இன்றி அவர் நடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய இரண்டாவது படத்திற்கு பிறகு வித்தியாசமான படத்தை எடுக்க விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 மில்லியன் வியூக்கள்

2 மில்லியன் வியூக்கள்

இந்நிலையில் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்ட படத்தின் ட்ரெயிலர் 24 மணிநேரத்தில் 2 மில்லியன் வியூக்களை தாண்டி சாதனை புரிந்துள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் பிரபுதேவா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இதை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X