மறுபடியும் முருங்கைக்காய் சமாச்சாரமா?

சென்னை: இயக்குநர் - நடிகர் - திரைக்கதாசிரியர் பாக்கியராஜ் நடித்து வரும் புதிய படம் சில புதிய எதிர்பார்ப்புகளை + கிளுகிளுப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

படத்தில் முந்தானை முடிச்சு சாயல் தென்படுகிறதோ என்றும் யோசிக்க வைக்கிறது பாக்கியராஜ் சம்பந்தப்பட்ட சில காட்சிகள்.

இந்தப் படத்தில் பாக்கியராஜ்தான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுவும் துணை முதல்வர் வேடத்தில். ஆனால் படத்தின் இயக்குநர் இவர் இல்லை. அதேசமயம், இவரது இயக்க சாயல் கண்டிப்பாக படத்தில் இருக்கிறது என்பது ஸ்டில்களைப் பார்த்தாலே தெரிகிறது.

பெஸ்ட் டைரக்டர்

பெஸ்ட் டைரக்டர்

ஒரு காலத்தில் திரைக்கதையாக்கத்திலும் படமாக்குவதிலும் புகழ் பெற்று விளங்கியவர் பாக்கியராஜ். நாளடைவில் புதுப் புது இயக்குநர்கள் பெருகி விட்டதாலும், மக்களின் டேஸ்ட் மாறி விட்டதாலும் பாக்கியராஜ் படங்களுக்கு வரவேற்பு குறைந்தது.

ஆனாலும் நின்று காட்டியவர்

ஆனாலும் நின்று காட்டியவர்

ஆனாலும் தனது பாணியில் சின்னதாக மாற்றம் செய்து சொக்கத் தங்கம் படத்தில் சொக்க வைத்தவர் பாக்கியராஜ்.

பாக்கியராஜ் பார்முலா இன்னும் வெல்கிறது

பாக்கியராஜ் பார்முலா இன்னும் வெல்கிறது

பாக்கியராஜ் குறைந்து விட்டாலும் கூட அவரது பார்முலாவுக்கு இன்னும் ஆஹா ஓஹோ வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. பல இயக்குநர்களும் அந்த பார்முலாவை அவ்வப்போது எடுத்துப் பயன்படுத்தி வென்றுகொண்டுதான் உள்ளனர்.

மகன் படத்துடன் சரி

மகன் படத்துடன் சரி

கடைசியாக பாக்கியராஜ் இயக்கியது சித்து +2. இது இவரது மகன் சாந்தனு நடித்த படம். படம் சரியாக போகவில்லை.

மீண்டும் பாக்கியராஜ்

மீண்டும் பாக்கியராஜ்

இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தில் முழு நீள வேடத்தில் தலை காட்டுகிறார் பாக்கியராஜ். படத்தின் பெயர் துணை முதல்வர்.

விவேகானந்தன் இயக்கத்தில்

விவேகானந்தன் இயக்கத்தில்

படத்தை விவேகானந்தன் என்பவர் இயக்குகிறார். ஐஸ்வர்யா மேனன், ஜெயராம், மீனாட்சி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன், மனோபாலா ஆகியோரும் படத்தில் உள்ளனர். பாக்கியராஜின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான ஜூனியர் பாலையாவுக்கும் முக்கிய வடம்.

ஸ்வாதி மேனனுடன்

ஸ்வாதி மேனனுடன்

படத்தில் ஸ்வாதி மேனன் முக்கிய வேடத்தில் வருகிறார். அதுவும் பாக்கியராஜுடன் சேர்ந்து கவர்ச்சியிலும் கலகலக்க வைத்துள்ளார்.

கண்ணத் தொறக்கனும் சாமி... !

கண்ணத் தொறக்கனும் சாமி... !

படத்தின் ஸ்டில்களில் நம்மைக் கவர்ந்தது நிறைய இருந்தாலும் பாக்கியராஜ், ஸ்வாதி மேனன் இணைந்து போட்டுள்ள பாடல் காட்சிதான் ரொம்பவே கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தானை முடிச்சு படத்தில் வந்த கண்ணத் தொறக்கனும் சாமி பாடல் சாயல் இதில் நிறையவே தெரிகிறது.

கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட

கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட

இதில் ஸ்வாதி மேனன் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட பாக்கியராஜுடன் பாடல் காட்சியில் டான்ஸ் போட்டுள்ளார். இந்தப் பாடல் எந்த சிச்சுவேஷனில் வருகிறது என்பதை பாக்கியராஜே சொன்னால்தான் உண்டு.

மறுபடியும் முருங்கைக்காய் சமாச்சாரம் எதையாவது கையில் எடுத்திருக்கிறாரா பாக்கியராஜ் என்று தெரியவில்லை...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X