பிகிலை நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கம்.. களைக்கட்டிய பஹ்ரைன்!
Recommended Video
பஹ்ரைன்: பஹ்ரைனில் பிகில் படம் ரிலீஸானதை முன்னிட்டு அங்குள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 25 ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. பஹ்ரைன் நாட்டின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு தமிழ் திரைப்படம் ஒரே நாளில் 90க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிட்டனர். அதுமட்டுமின்றி நள்ளிரவு 12 மணி காட்சி மற்றும் அதிகாலை 3 மணி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் நிரம்பியது.

இதனையொட்டி பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெள்ளிக்கிழமை படம் வெளியான அன்று பிரத்யேகமாக ரசிகர்களுக்காக திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டது . இப்படங்கள் வெளியாகும் திரையரங்குகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டும், பேனர்கள் அமைக்கப்பட்டும் மற்றும் கேக் வெட்டியும் மிக விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர் .

இதுதொடர்பாக நம்மிடம் உரையாடிய பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் "25 தேதி பிகில் படம் வெளியான நாள்தான் தங்களுக்கு தீபாவளி என்று மிகவும் உற்சாகமாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி படம் வெளியான அன்று பல நலத்திட்ட உதவிகளையும் செய்தனர்.

இதற்கு முன்பே பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இங்குள்ள கூலி தொழிலாளர்களுக்கு உணவு வழங்குதல் அவர்களின் குறை கேட்டு முடிந்தவற்றை தீர்த்துவைக்க உதவுதல் போன்ற பலவிதமான நலத்திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்கின்றனர். இது வெறும் மக்கள் இயக்கம் என்று இல்லாமல் மக்களுக்கான இயக்கமாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இது வளைகுடா நாடுகளில் முதன்முதலாக ரசிகர்களால் வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட்டமாக பிகில் திரைபடம் அமைந்தது என்பது குறிப்படத்தக்கது.


Click it and Unblock the Notifications











