கொரோனா வைரஸ் பாதிப்பு.. பஹ்ரைனில் விஜய் ரசிகர்கள் செய்த உதவி.. குவிகிறது பாராட்டு!

பஹ்ரைன்: கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவை தொடர்ந்து, பல்வேறு உலக நாடுகளில் இந்த கொரோனா வைரஸுக்கு 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பஹ்ரைனிலும், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு பஹ்ரைனில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி, அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் நேராத வண்ணம் தடுக்க பஹ்ரைன் அரசு மற்றும் மருத்துவர்கள் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் உதவி

விஜய் ரசிகர்கள் உதவி

இந்நிலையில், பஹ்ரைனில் உள்ள தளபதி ரசிகர்கள் தங்களால் இயன்ற சின்ன சின்ன உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பிறரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாத வண்ணம் தடுக்க இலவச முக கவசங்களை வழங்கி வருகின்றனர். நேற்றைய தினம், பஹ்ரைனில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் இதற்காக ஒரு பெரிய ஏற்பாட்டை செய்திருந்தது.

உதவும் கரங்கள்

உதவும் கரங்கள்

இந்தியாவில் மட்டுமின்றி, நடிகர் விஜய்க்கு உலகளவில் ரசிகர்களும், மக்கள் இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இயற்கை பேரிடர் காலத்தின் போதும், மற்ற நிகழ்வுகளின் போதும், விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சமூக பற்றுக் கொண்ட இளைஞர்கள் முன்னின்று உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கில்

ஆயிரக்கணக்கில்

நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த முகாமில் விஜய் ரசிகர்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு, ஆயிரக்கணக்கான முக கவசங்களை இலவசமாக அளித்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர்.

குவிகிறது பாராட்டு

குவிகிறது பாராட்டு

பஹ்ரைனில் உள்ள தளபதி விஜயின் மக்கள் இயக்கம் மேற்கொண்டுள்ள இந்த சமூகப் பணி குறித்து அறிந்த விஜய் ரசிகர்கள், சமூக வலைதளத்தில், அவர்களுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது மட்டும் இல்லைங்க, ரசிகர்கள் இதுபோன்ற நல்ல காரியங்களையும் அவ்வப்போது செய்து தான் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X