நலத்திட்ட உதவிகளுடன் களைக்கட்டிய விஜய் பிறந்தநாள்.. பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் அசத்தல்!
சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பஹ்ரைனில் உள்ள விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
Recommended Video
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் நேற்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனால் நேற்று விஜய் தொடர்பான ஏரளாமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டானது. ரசிகர்களுக்கு போட்டியாக திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடப்பட்டது.

பஹ்ரைனில், இந்தியா மற்றும் பல நாடுகளில் இருந்து வந்து பணிபுரியும் வீட்டு பணிப்பெண்கள், முடிதிருத்தும் தொழிலாளார்கள் என பலர் கொரோனாவால் வேலை இழந்து கஷ்டப்பட்டு வந்தனர். மேலும் பல தொழிலாளர் விடுதிகள் அரசின் உத்தரவுபடி தனிமைப்படுத்தப்பட்டு வெளியில் வர இயலாத சூழ்நிலையில் இருந்தனர்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு அன்றாட உணவுக்கு தேவையான மளிகை, அரிசி, எண்ணை அடங்கிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சரி நலத்திட்ட உதவிகளை பெற்றவர்களும் சரி மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











