Rajinikanth: பாக்ஸ் ஆபீஸ் கிங் எப்பவுமே ரஜினிதான்.. பாகுபலி ஹீரோ சொன்னத பாருங்க!

ஐதராபாத்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. ஆகஸ்ட் 10ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என ஒவ்வொரு மொழியின் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இதனிடையே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை நெல்சன் திலீஸ்குமார் இயக்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபீஸ் கிங் ரஜினி என பிரபாஸ் புகழ்ச்சி: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கியிருந்தார் சிவா. இந்தப் படம் கடந்த ஆண்டில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் வசூலில் சாதனை படைத்தது. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியிருந்தார் நயன்தாரா. தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். குஷ்பூ, மீனா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். அதிகமான நட்சத்திரங்களுடன் இந்தப் படம் வெளியானது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. ஆனால் நெல்சன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான பீஸ்ட் படம் சொதப்பியதால், அவரது இயக்கத்தில் ரஜினி இணைவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கமிட் செய்தபடியே இந்தக் கூட்டணி ஜெயிலர் படத்திற்காக இணைந்து. இதோ தற்போது படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்து ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது.

ஜெயிலர் படத்தில் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், ஒவ்வொரு மொழியிலும் சிறப்பான நடிகர்களை தேர்வு செய்து கதையில் இணைத்துள்ளார் நெல்சன். இதனால் படத்திற்கு ரசிகர்களிடையே ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தான் எப்போதுமே பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று பிரபல பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பாக்ஸ் ஆபீஸ் என்ற வார்த்தையை கேட்டதும் அவரது நினைவிற்கு வருவது என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் அதிகமானோர் ரசிக்கும் நடிகராக ரஜினி உள்ளதற்கு பிரபாசின் இந்த பதிலும் ஒரு சான்று.

Bahubali hero Prabhas says that Actor Rajini is Always Box office king

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்னும் இரு மாதங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெயிலர் என இணையதளம் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி இந்தப் படத்தில் ஸ்டைலான லுக்கில் காணப்படுகிறார். அவருக்கு அதிகமான ஆக்ஷன் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு படத்தில் டூயட் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X