வாவ்.. ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி திரைப்படம்.. பெருமிதத்துடன் அறிவித்த தூதரகம்!
சென்னை: இந்திய திரைப்படமான பாகுபலி ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.
Recommended Video
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ் எஸ் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்கள் உலகளவில் கவனத்தை பெற்றன.
தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக்கப்பட்ட இப்படம், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பெரும் வரவேற்பு
பெரும் வரவேற்பையும் வசூலையும் குவித்த இப்படத்திற்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்எம் கீரவாணி இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது.

வசூல் குவிப்பு
பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இதன் முதல் பாகம் உலகம் முழுவதும் 685 கோடி ரூபாயை வசூலித்தது. இதேபோல் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் மொத்தம் 1,810 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்தது.

ரஷ்ய தொலைக்காட்சி
இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த தெலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாகுபலி ஒளிபரப்பு உரிமையை பெற்றது. இதனை தொடர்ந்து ‘பாகுபலி 2' திரைப்படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்த அந்நிறுவனம், இப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.

ரஷ்ய தொலைக்காட்சி
இதனை இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள டிவிட்டில், ரஷ்யாவில் இந்தியப் படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. ‘பாகுபலி 2' திரைப்படம் ரஷ்ய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரஷ்யத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என தெரிவித்துள்ளது.

லண்டன் ஆல்பர்ட்
மேலும் ரஷ்ய மொழியில் ஒளிபரப்பான பாகுபலி 2 படத்தின் காட்சியையும் ரஷ்ய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. இந்திய திரைப்படமான பாகுபலி, ரஷ்ய மொழியில் வெளியாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் பாகுபலி படத்தின் முதல் பாகமான பாகுபலி தி பிகினிங் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











